• May 10 2026

உடையார்கட்டில் துப்பாக்கியுடன் குடும்பஸ்தர் கைது!

shanu / Nov 3rd 2025, 11:08 pm
image

சட்டவிரோத துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (02) மாலை உடையார்கட்டு பகுதியில் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.


புதுக்குடியிருப்பு பொலிஸ் விசேட பிரிவினருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற புதுக்குடியிருப்பு பொலிஸார் சட்டவிரோத இடியன் துப்பாக்கியை உடமையில் வைத்திருந்த குடும்பஸ்தரை கைது செய்துள்ளனர்.


குறித்த சம்பவத்தில் இருட்டுமடு பகுதியில் வசிக்கும் 46 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உடையார்கட்டில் துப்பாக்கியுடன் குடும்பஸ்தர் கைது சட்டவிரோத துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (02) மாலை உடையார்கட்டு பகுதியில் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.புதுக்குடியிருப்பு பொலிஸ் விசேட பிரிவினருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற புதுக்குடியிருப்பு பொலிஸார் சட்டவிரோத இடியன் துப்பாக்கியை உடமையில் வைத்திருந்த குடும்பஸ்தரை கைது செய்துள்ளனர்.குறித்த சம்பவத்தில் இருட்டுமடு பகுதியில் வசிக்கும் 46 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement