இலங்கை பொலிஸின் பெயர் மற்றும் அடையாளங்களைப் பயன்படுத்தி, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட போலி விளம்பரங்கள் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருவதாக இலங்கை பொலிஸ் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவ்வாறான விளம்பரங்கள் மற்றும் தகவல்கள் இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ அறிவித்தல்கள் அல்ல என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை பொலிஸின் பெயர், இலச்சினை மற்றும் பிற அடையாளங்களைப் பயன்படுத்தி AI தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் விளம்பரங்கள் மற்றும் அறிவித்தல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வமான தகவல்களை அறிந்துகொள்ள, இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ இலச்சினையுடன் கூடிய ‘Sri Lanka Police’ பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்படும் அறிவித்தல்கள் மற்றும் விளம்பரங்களை மட்டுமே நம்புமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
போலி தகவல்கள் மூலம் பொதுமக்கள் ஏமாற்றப்படுவதைத் தடுக்கும் வகையில், சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் பொலிஸ் தொடர்பான அறிவித்தல்களை உறுதிப்படுத்திய பின்னரே நம்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
AI மூலம் உருவாக்கப்பட்ட போலி விளம்பரங்கள் – இலங்கை பொலிஸார் எச்சரிக்கை இலங்கை பொலிஸின் பெயர் மற்றும் அடையாளங்களைப் பயன்படுத்தி, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட போலி விளம்பரங்கள் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருவதாக இலங்கை பொலிஸ் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.இவ்வாறான விளம்பரங்கள் மற்றும் தகவல்கள் இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ அறிவித்தல்கள் அல்ல என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இலங்கை பொலிஸின் பெயர், இலச்சினை மற்றும் பிற அடையாளங்களைப் பயன்படுத்தி AI தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் விளம்பரங்கள் மற்றும் அறிவித்தல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதிகாரப்பூர்வமான தகவல்களை அறிந்துகொள்ள, இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ இலச்சினையுடன் கூடிய ‘Sri Lanka Police’ பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்படும் அறிவித்தல்கள் மற்றும் விளம்பரங்களை மட்டுமே நம்புமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.போலி தகவல்கள் மூலம் பொதுமக்கள் ஏமாற்றப்படுவதைத் தடுக்கும் வகையில், சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் பொலிஸ் தொடர்பான அறிவித்தல்களை உறுதிப்படுத்திய பின்னரே நம்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.