• Oct 01 2026

பாடசாலை மாணவர்களுக்கு கண் பரிசோதனை!

dorin / Oct 1st 2026, 1:00 pm
image

வடக்கு மாகாண கல்வி அமைச்சும் வலிகாமம் வலய கல்வி பணிமனையும் இணைந்து நடாத்தும் கண்பரிசோதனை முகாம் இன்றையதினம் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் நடைபெற்றது.

மாணவர்களின் கண் பார்வை குறித்து பரிசோதனைகளை மேற்கொண்டு அதற்கு தீர்வுகளை வழங்கும் நோக்கில் இந்த பரிசோதனை முகாம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது சங்கானை கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு இன்றையதினம் கண்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

வலயக் கல்விப் பணிமனையின் அதிகாரி சிவனேசனின் கண்காணிப்பில் நடைபெற்ற இந்த பரிசோதனை முகாமில் கண் வைத்திய நிபுணர் மலரவன் பரிசோதனைகளை மேற்கொண்டார். ஒழுங்குபடுத்தல் மற்றும் மேலதிக செயற்பாடுகளை வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி ஆசிரியர்கள், சங்கானை பொது சுகாதார பரிசோதகர் பணிமனை உத்தியோகத்தர்கள் மேற்கொண்டனர்.

பாடசாலை மாணவர்களுக்கு கண் பரிசோதனை வடக்கு மாகாண கல்வி அமைச்சும் வலிகாமம் வலய கல்வி பணிமனையும் இணைந்து நடாத்தும் கண்பரிசோதனை முகாம் இன்றையதினம் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் நடைபெற்றது.மாணவர்களின் கண் பார்வை குறித்து பரிசோதனைகளை மேற்கொண்டு அதற்கு தீர்வுகளை வழங்கும் நோக்கில் இந்த பரிசோதனை முகாம் முன்னெடுக்கப்பட்டது.இதன்போது சங்கானை கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு இன்றையதினம் கண்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.வலயக் கல்விப் பணிமனையின் அதிகாரி சிவனேசனின் கண்காணிப்பில் நடைபெற்ற இந்த பரிசோதனை முகாமில் கண் வைத்திய நிபுணர் மலரவன் பரிசோதனைகளை மேற்கொண்டார். ஒழுங்குபடுத்தல் மற்றும் மேலதிக செயற்பாடுகளை வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி ஆசிரியர்கள், சங்கானை பொது சுகாதார பரிசோதகர் பணிமனை உத்தியோகத்தர்கள் மேற்கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement