• Apr 26 2026

ஊடகவியலாளர் விருந்தில் வெடிச்சத்தம்; அவசரமாக வெளியேறிய ட்ரம்ப்! வொஷிங்டனில் பதற்றம்

Chithra / Apr 26th 2026, 7:57 am
image

வொஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சங்கத்தின் வருடாந்த இரவு விருந்து நிகழ்வின் போது, பலத்த சத்தங்கள் கேட்டதை அடுத்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோர் அங்கிருந்து அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.


நேற்று (26) மாலை இடம்பெற்ற இந்த அமைதியற்ற சூழல் குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.


மண்டபத்திற்குள் துப்பாக்கிச் சூடு போன்ற சத்தம் கேட்டவுடன், ஜனாதிபதியும் விருந்தினர்களும் தரையில் விழுந்து பாதுகாப்பைத் தேடியுள்ளனர்.


இதன்போது உடனடியாகச் செயற்பட்ட பாதுகாப்புப் பிரிவினர், ஜனாதிபதியையும் மெலனியாவையும் பிரதான மேடையிலிருந்து அகற்றி பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.


ஜனாதிபதி வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, நவீன ரக துப்பாக்கிகளுடன் கூடிய பாதுகாப்பு அதிகாரிகள் குழுவினர் அவர் அமர்ந்திருந்த பகுதியைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து பலத்த பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தினர்.


இந்தச் சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்த வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சங்கத்தின் தலைவி வெய்ஜியா ஜியாங், விசாரணைகள் முன்னெடுக்கப்படும் அதேவேளை, தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிகழ்வு மீண்டும் தொடரும் எனக் குறிப்பிட்டார்.


இந்தநிலையில் ஹில்டன் விருந்தகத்தின் பிரதான மண்டபத்தில் இன்னும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்புக் காரணங்களுக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 


ஊடகவியலாளர் விருந்தில் வெடிச்சத்தம்; அவசரமாக வெளியேறிய ட்ரம்ப் வொஷிங்டனில் பதற்றம் வொஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சங்கத்தின் வருடாந்த இரவு விருந்து நிகழ்வின் போது, பலத்த சத்தங்கள் கேட்டதை அடுத்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோர் அங்கிருந்து அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.நேற்று (26) மாலை இடம்பெற்ற இந்த அமைதியற்ற சூழல் குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.மண்டபத்திற்குள் துப்பாக்கிச் சூடு போன்ற சத்தம் கேட்டவுடன், ஜனாதிபதியும் விருந்தினர்களும் தரையில் விழுந்து பாதுகாப்பைத் தேடியுள்ளனர்.இதன்போது உடனடியாகச் செயற்பட்ட பாதுகாப்புப் பிரிவினர், ஜனாதிபதியையும் மெலனியாவையும் பிரதான மேடையிலிருந்து அகற்றி பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.ஜனாதிபதி வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, நவீன ரக துப்பாக்கிகளுடன் கூடிய பாதுகாப்பு அதிகாரிகள் குழுவினர் அவர் அமர்ந்திருந்த பகுதியைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து பலத்த பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தினர்.இந்தச் சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்த வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சங்கத்தின் தலைவி வெய்ஜியா ஜியாங், விசாரணைகள் முன்னெடுக்கப்படும் அதேவேளை, தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிகழ்வு மீண்டும் தொடரும் எனக் குறிப்பிட்டார்.இந்தநிலையில் ஹில்டன் விருந்தகத்தின் பிரதான மண்டபத்தில் இன்னும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்புக் காரணங்களுக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Advertisement

Advertisement

Advertisement