• May 15 2026

நாட்டில் மீண்டும் தலைதூக்கும் யானைக்கால் நோய்! 68 பேருக்கு தொற்று உறுதி

Chithra / May 14th 2026, 8:25 am
image

நாட்டில் கடந்த 2025ஆம் ஆண்டில் மாத்திரம் 68 யானைக்கால் நோய் பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக யானைக்கால் நோய் தடுப்புக்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.


பரிசோதனைகளின் போது கண்டறியப்பட்ட நோயாளர்களில் சரிபாதியானோர் இந்தியாவில் இருந்து வருகை தந்து இலங்கையில் பணியாற்றும் வெளிநாட்டு தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


யானைக்கால் நோய் தடுப்பு இயக்கத்தின் பணிப்பாளர் மருத்துவர் பிரசங்க சேரசிங்க தெரிவிக்கையில், நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட 68 பேரில் 34 பேர் இலங்கையர்கள் என்றும், மீதமுள்ள 34 பேர் இலங்கையில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் இந்தியப் பிரஜைகள் என்றும் கூறியுள்ளார்.


இந்த நோய்த்தொற்று பிரதானமாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் குருநாகல் ஆகிய ஏழு மாவட்டங்களில் தொடர்ந்து பதிவாகி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இதனிடையே, இலங்கையில் இருந்து யானைக்கால் நோயை 2030ஆம் ஆண்டுக்குள் முழுமையாக ஒழிப்பதை அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளது. மேலும், உள்ளூர் ரீதியாகப் பரவும் தொற்றுகளை பூச்சியமாகக் குறைத்து நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பொதுச் சுகாதாரக் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் மீண்டும் தலைதூக்கும் யானைக்கால் நோய் 68 பேருக்கு தொற்று உறுதி நாட்டில் கடந்த 2025ஆம் ஆண்டில் மாத்திரம் 68 யானைக்கால் நோய் பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக யானைக்கால் நோய் தடுப்புக்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.பரிசோதனைகளின் போது கண்டறியப்பட்ட நோயாளர்களில் சரிபாதியானோர் இந்தியாவில் இருந்து வருகை தந்து இலங்கையில் பணியாற்றும் வெளிநாட்டு தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.யானைக்கால் நோய் தடுப்பு இயக்கத்தின் பணிப்பாளர் மருத்துவர் பிரசங்க சேரசிங்க தெரிவிக்கையில், நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட 68 பேரில் 34 பேர் இலங்கையர்கள் என்றும், மீதமுள்ள 34 பேர் இலங்கையில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் இந்தியப் பிரஜைகள் என்றும் கூறியுள்ளார்.இந்த நோய்த்தொற்று பிரதானமாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் குருநாகல் ஆகிய ஏழு மாவட்டங்களில் தொடர்ந்து பதிவாகி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதனிடையே, இலங்கையில் இருந்து யானைக்கால் நோயை 2030ஆம் ஆண்டுக்குள் முழுமையாக ஒழிப்பதை அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளது. மேலும், உள்ளூர் ரீதியாகப் பரவும் தொற்றுகளை பூச்சியமாகக் குறைத்து நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பொதுச் சுகாதாரக் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement