இலங்கையில் மீண்டும் யானைக்கால் நோய் தொடர்பான கவலை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு முழுவதும் நாட்டில் 68 பேருக்கு யானைக்கால் நோய் கண்டறியப்பட்டுள்ளதாக யானைக்கால் நோய் தடுப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.
இதில் பாதி பேர் இந்தியாவில் இருந்து வேலைக்காக இலங்கைக்கு வந்தவர்கள் என்பதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
யானைக்கால் நோய் தடுப்பு இயக்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் பிரசங்க சேரசிங்க கூறுகையில்,
கடந்த 2025ஆம் ஆண்டில் 34 இலங்கையர்களுக்கு இந்த நோய் உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
அதேபோல், இந்தியாவில் இருந்து தொழிலாளர்களாக இலங்கைக்கு வந்து நீண்டகாலம் தங்கியிருந்தவர்களை பரிசோதித்தபோது மேலும் 34 பேருக்கு நோய் இருப்பது கண்டறியப்பட்டதாகவும் கூறினார்.
குறிப்பாக ஹம்பாந்தோட்டை, காலி, மாத்தறை, களுத்துறை, கம்பஹா, கொழும்பு மற்றும் குருநாகல் போன்ற 7 மாவட்டங்களிலேயே இந்த நோய் அதிகமாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும், “2030ஆம் ஆண்டுக்குள் இலங்கையில் இருந்து யானைக்கால் நோயை முற்றிலும் ஒழிக்க திட்டமிட்டு செயல்பட்டு வருகிறோம். நாட்டில் ஒரே ஒரு நோயாளியும் இல்லாத நிலையை உருவாக்குவதே எங்கள் இலக்கு” என்றும் வைத்தியர் பிரசங்க சேரசிங்க குறிப்பிட்டார்.
தற்போது நோய் கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை தொடர்ந்து பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார தரப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
இலங்கையில் மீண்டும் தலைதூக்கும் யானைக்கால் நோய் 68 பேருக்கு பாதிப்பு இலங்கையில் மீண்டும் யானைக்கால் நோய் தொடர்பான கவலை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு முழுவதும் நாட்டில் 68 பேருக்கு யானைக்கால் நோய் கண்டறியப்பட்டுள்ளதாக யானைக்கால் நோய் தடுப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.இதில் பாதி பேர் இந்தியாவில் இருந்து வேலைக்காக இலங்கைக்கு வந்தவர்கள் என்பதும் கவனத்தை ஈர்த்துள்ளது.யானைக்கால் நோய் தடுப்பு இயக்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் பிரசங்க சேரசிங்க கூறுகையில், கடந்த 2025ஆம் ஆண்டில் 34 இலங்கையர்களுக்கு இந்த நோய் உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்தார். அதேபோல், இந்தியாவில் இருந்து தொழிலாளர்களாக இலங்கைக்கு வந்து நீண்டகாலம் தங்கியிருந்தவர்களை பரிசோதித்தபோது மேலும் 34 பேருக்கு நோய் இருப்பது கண்டறியப்பட்டதாகவும் கூறினார்.குறிப்பாக ஹம்பாந்தோட்டை, காலி, மாத்தறை, களுத்துறை, கம்பஹா, கொழும்பு மற்றும் குருநாகல் போன்ற 7 மாவட்டங்களிலேயே இந்த நோய் அதிகமாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுமேலும், “2030ஆம் ஆண்டுக்குள் இலங்கையில் இருந்து யானைக்கால் நோயை முற்றிலும் ஒழிக்க திட்டமிட்டு செயல்பட்டு வருகிறோம். நாட்டில் ஒரே ஒரு நோயாளியும் இல்லாத நிலையை உருவாக்குவதே எங்கள் இலக்கு” என்றும் வைத்தியர் பிரசங்க சேரசிங்க குறிப்பிட்டார்.தற்போது நோய் கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை தொடர்ந்து பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார தரப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.