• Aug 11 2025

வயலுக்குள் நுழைந்த யானை - தலைதெறிக்க ஓடிய விவசாயிகள்; நூலிழையில் தப்பிய நபர்!

shanuja / Aug 11th 2025, 12:00 pm
image

திடீரென நுழைந்த யானையிடமிருந்து நபரொருவர் மயிரிழையில் உயிர் தப்பிக்கும் காட்சி வெளிவந்து பதற வைத்துள்ளது. 


இந்தச் சம்பவம் அனுராதபுரம் - மிஹிந்தலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. 


தனது வீட்டிற்கு அருகே இருந்த காணிக்குள் நின்று கொண்டிருந்த நபரொருவர், திடீரென யானை நுழைந்தததை அவதானித்து பதறியடித்து ஓடினார். 


யானை வருவதை எதிர்பாராமல் இருந்த நபர், யானையைக் கண்டதும் அலறியடித்து விழுந்து ஓடினார். 


நபரைக் கண்ட யானை அவரைத் துரத்திச் சென்றது. அதன்போது யானையிடமிருந்து தப்பிக்க உயிரைக் கையில் பிடித்தவாறு தலைதெறிக்க ஓடியுள்ளார். 


யானையின் பிடியில் சிக்கியிருவாரோ என்ற பதற்றத்தில் வீட்டிலிருந்தவர்கள் ஓடிவாங்கோ ஓடிவாங்கோ,  அல்லா அல்லா என சத்தமிட்டனர். 


யானையிடமிருந்து அந்த நபர் தப்புவதற்காக உயிரைக் கையில் பிடித்து தலைதெறிக்க ஓடிச்சென்ற காட்சி காணொளியாக வெளிவந்த பதறவைத்துள்ளது. 


கடந்த சில நாள்களாக யானைகளின் தாக்குதல்களால் பலர் உயிரிழந்துள்ளனர். யானையின் தாக்குதலும் யானைகளின் அச்சுறுத்தல்களும் மக்களிடையே உயிர்பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

வயலுக்குள் நுழைந்த யானை - தலைதெறிக்க ஓடிய விவசாயிகள்; நூலிழையில் தப்பிய நபர் திடீரென நுழைந்த யானையிடமிருந்து நபரொருவர் மயிரிழையில் உயிர் தப்பிக்கும் காட்சி வெளிவந்து பதற வைத்துள்ளது. இந்தச் சம்பவம் அனுராதபுரம் - மிஹிந்தலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. தனது வீட்டிற்கு அருகே இருந்த காணிக்குள் நின்று கொண்டிருந்த நபரொருவர், திடீரென யானை நுழைந்தததை அவதானித்து பதறியடித்து ஓடினார். யானை வருவதை எதிர்பாராமல் இருந்த நபர், யானையைக் கண்டதும் அலறியடித்து விழுந்து ஓடினார். நபரைக் கண்ட யானை அவரைத் துரத்திச் சென்றது. அதன்போது யானையிடமிருந்து தப்பிக்க உயிரைக் கையில் பிடித்தவாறு தலைதெறிக்க ஓடியுள்ளார். யானையின் பிடியில் சிக்கியிருவாரோ என்ற பதற்றத்தில் வீட்டிலிருந்தவர்கள் ஓடிவாங்கோ ஓடிவாங்கோ,  அல்லா அல்லா என சத்தமிட்டனர். யானையிடமிருந்து அந்த நபர் தப்புவதற்காக உயிரைக் கையில் பிடித்து தலைதெறிக்க ஓடிச்சென்ற காட்சி காணொளியாக வெளிவந்த பதறவைத்துள்ளது. கடந்த சில நாள்களாக யானைகளின் தாக்குதல்களால் பலர் உயிரிழந்துள்ளனர். யானையின் தாக்குதலும் யானைகளின் அச்சுறுத்தல்களும் மக்களிடையே உயிர்பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement