• May 01 2025

தேர்தலுக்குப் பின்னர் நிச்சயமாக மின் கட்டணம் உயரும்! - எச்சரிக்கும் நாமல்

Chithra / May 1st 2025, 2:47 pm
image

 

 

அரசாங்கத்தில் உள்ள சிலர் பணம் ஈட்டும் நோக்கில் தற்போது டீசல் மாஃபியாவை ஏற்படுத்தி வருவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

அலவ்வ பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

ஜே.வி.பி அரசாங்கம் 76 வருடங்களாக நாட்டில் இடம்பெற்ற வேலைத் திட்டங்களைச் சீரழிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதே தவிர, புதிய வேலைத் திட்டங்கள் எதனையும் முன்னெடுக்கவில்லை.  

தேர்தலுக்குப் பின்னர் நிச்சயமாக தற்போதைய அரசாங்கம் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்கும். 

அதே போன்று, அரசாங்கம் டீசல் மாஃபியாவை உருவாக்கும் வேலைத் திட்டத்தையும் முன்னெடுத்துள்ளது.  

எனவே, இதன் பாதிப்பு பொதுமக்களையே சென்றடையும்.என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்குப் பின்னர் நிச்சயமாக மின் கட்டணம் உயரும் - எச்சரிக்கும் நாமல்   அரசாங்கத்தில் உள்ள சிலர் பணம் ஈட்டும் நோக்கில் தற்போது டீசல் மாஃபியாவை ஏற்படுத்தி வருவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அலவ்வ பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜே.வி.பி அரசாங்கம் 76 வருடங்களாக நாட்டில் இடம்பெற்ற வேலைத் திட்டங்களைச் சீரழிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதே தவிர, புதிய வேலைத் திட்டங்கள் எதனையும் முன்னெடுக்கவில்லை.  தேர்தலுக்குப் பின்னர் நிச்சயமாக தற்போதைய அரசாங்கம் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்கும். அதே போன்று, அரசாங்கம் டீசல் மாஃபியாவை உருவாக்கும் வேலைத் திட்டத்தையும் முன்னெடுத்துள்ளது.  எனவே, இதன் பாதிப்பு பொதுமக்களையே சென்றடையும்.என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement