எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் மூன்று தேர்தல்களை நடத்தியுள்ளோம். தற்போது நாட்டில் அபிவிருத்திகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவற்றிற்கு தடை வராமல் அடுத்த ஆண்டு மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு முயற்சி செய்வோம் என தொழில் அமைச்சின் பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெறும் தொழில் திணைக்களத்தின் நடமாடும் சேவையில் கலந்து கொண்ட பின் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள தொழில் அமைச்சின் பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிஙக யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தொழில் திணைக்களத்தில் நடைபெறும் நடமாடும் சேவையை நிகழ்வில் கலந்து கொணடதோடு அலுவலத்தையும் கண்காணித்தார்
இந்நிகழ்வில் வடமாகாண தொழில் ஆணையாளர் S.சிவறஞ்சினி, வடமாகாண அலுவலக உதவி தொழில் ஆணையாளர் K.நாகேந்திரன், யாழ் மாவட்ட உதவி தொழில் ஆணையாளர் A.அன்ரன் தனேஸ், யாழ் மாவட்ட தொழில் திணைக்கள அதிகாரிகள், நடமாடும் சேவையை பெற வந்த பயனாளிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்
மாகாண சபை தேர்தல்கள் அடுத்த ஆண்டில் நடத்துவதற்கு முயற்சி யாழில் பிரதி அமைச்சர் மஹிந்த தெரிவிப்பு எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் மூன்று தேர்தல்களை நடத்தியுள்ளோம். தற்போது நாட்டில் அபிவிருத்திகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவற்றிற்கு தடை வராமல் அடுத்த ஆண்டு மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு முயற்சி செய்வோம் என தொழில் அமைச்சின் பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்தார்.யாழ்ப்பாணத்தில் நடைபெறும் தொழில் திணைக்களத்தின் நடமாடும் சேவையில் கலந்து கொண்ட பின் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள தொழில் அமைச்சின் பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிஙக யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தொழில் திணைக்களத்தில் நடைபெறும் நடமாடும் சேவையை நிகழ்வில் கலந்து கொணடதோடு அலுவலத்தையும் கண்காணித்தார்இந்நிகழ்வில் வடமாகாண தொழில் ஆணையாளர் S.சிவறஞ்சினி, வடமாகாண அலுவலக உதவி தொழில் ஆணையாளர் K.நாகேந்திரன், யாழ் மாவட்ட உதவி தொழில் ஆணையாளர் A.அன்ரன் தனேஸ், யாழ் மாவட்ட தொழில் திணைக்கள அதிகாரிகள், நடமாடும் சேவையை பெற வந்த பயனாளிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்