QR நடைமுறை காரணமாக முச்சக்கர வண்டி சாரதிகள், தனியார் வாடகை வேன் சாரதிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இது குறித்து மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டி சாரதிகள் கூறுகையில் ,
QR நடைமுறை காரணமாக வாராந்தம் வழங்கப்படும் 15 லீட்டர் எமக்கு போதுமானது அல்ல. வாராந்தம் எமக்கு குறைந்தபட்சம் 30 லீட்டர் எரிபொருள் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை தனியார் வாடகை வேன்களுக்கு 40 லீட்டர் எரிபொருள் போதுமான அளவு இல்லை என்று தனியார் வேன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாங்கள் அன்றாட வாழ்வில் வாகனங்கள் வாடகைக்கு சென்று அதன் மூலம் கிடைக்கும் வருவாய் வைத்து உணவு, வீட்டு வாடகை மற்றும் பாடசாலை செலவு, மருத்துவ செலவு போன்றவற்றை நடாத்த வேண்டும். வழங்கப்படும் 40 லீட்டர் எரிபொருள் எமக்கு போதுமானது இல்லை. வாராந்தம் 80 லீட்டர் எரிபொருள் தேவை என்று தெரிவித்துள்ளனர்.இது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
QR நடைமுறையால் முச்சக்கரவண்டி, தனியார் வாடகை வேன் சாரதிகள் அவதி QR நடைமுறை காரணமாக முச்சக்கர வண்டி சாரதிகள், தனியார் வாடகை வேன் சாரதிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இது குறித்து மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டி சாரதிகள் கூறுகையில் ,QR நடைமுறை காரணமாக வாராந்தம் வழங்கப்படும் 15 லீட்டர் எமக்கு போதுமானது அல்ல. வாராந்தம் எமக்கு குறைந்தபட்சம் 30 லீட்டர் எரிபொருள் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.இதேவேளை தனியார் வாடகை வேன்களுக்கு 40 லீட்டர் எரிபொருள் போதுமான அளவு இல்லை என்று தனியார் வேன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். நாங்கள் அன்றாட வாழ்வில் வாகனங்கள் வாடகைக்கு சென்று அதன் மூலம் கிடைக்கும் வருவாய் வைத்து உணவு, வீட்டு வாடகை மற்றும் பாடசாலை செலவு, மருத்துவ செலவு போன்றவற்றை நடாத்த வேண்டும். வழங்கப்படும் 40 லீட்டர் எரிபொருள் எமக்கு போதுமானது இல்லை. வாராந்தம் 80 லீட்டர் எரிபொருள் தேவை என்று தெரிவித்துள்ளனர்.இது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.