மாத்தளை நகரிலிருந்து கொழும்பு நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தின் சாரதி, மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் பேராதெனிய பொலிஸார் போக்குவரத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வழமையான சோதனை நடவடிக்கையின் போது பேருந்து நிறுத்தி சாரதியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அவர் மதுபோதையில் இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததையடுத்து மேலதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், குறித்த சாரதி செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் (லைசன்ஸ்) இன்றியே பேருந்தை இயக்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சாரதியிடம் பேரதெனிய போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுபோதையில் பேருந்து செலுத்திய சாரதி கைது – ஓட்டுநர் உரிமமும் இல்லை மாத்தளை நகரிலிருந்து கொழும்பு நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தின் சாரதி, மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் பேராதெனிய பொலிஸார் போக்குவரத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.வழமையான சோதனை நடவடிக்கையின் போது பேருந்து நிறுத்தி சாரதியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அவர் மதுபோதையில் இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததையடுத்து மேலதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.அதன்படி, வைத்திய பரிசோதனையில் சாரதி மதுபோதையில் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலும், குறித்த சாரதி செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் (லைசன்ஸ்) இன்றியே பேருந்தை இயக்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சாரதியிடம் பேரதெனிய போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.