• May 20 2026

டக்ளஸ் தேவானந்தா சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி!

Chithra / Dec 30th 2025, 9:45 am
image

 

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

 

அதன்படி, அவர் மஹர சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்தார். 

 

இந்த நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பாதுகாப்பு தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் நேற்று கூறியிருந்தார். 

  

இந்நிலையில் டக்ளஸ் தேவானந்தாவின் பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் தொடர்பில் இதுவரை எவ்வித சிக்கல்களும் ஏற்படவில்லை என நீதி அமைச்சர்  ஹர்ஷண நாணயக்கார குறிப்பிட்டுள்ளார். 

 

அந்த விடயம் தொடர்பில் எவ்வித முறைப்பாடுகளும் இதுவரை பதிவாகவில்லை எனவும் அவர்  குறிப்பிட்டுள்ளார். 

 

எவ்வாறாயினும், டக்ளஸ் தேவானந்தாவின் பாதுகாப்பு தொடர்பில் ஏதேனும் சந்தேகங்கள் அல்லது முறைப்பாடுகள் இருப்பின் அவற்றை முறையாக சமர்பிக்கும் பட்சத்தில், அவற்றை ஆராயந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார். 

 

முன்னதாக, இலங்கை இராணுவத்தினால், டக்ளஸ் தேவானந்தாவிற்கு உத்தியோகப்பூர்வமாக வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று வெலிவேரிய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. திட்டமிட்ட குற்றக்குழு தலைவரான மாகந்துரே மதுஷ் வழங்கிய தகவலுக்கு அமையவே குறித்த துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டது. 

 

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு வரவழைக்கப்பட்ட போதே, முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டதுடன், எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்

டக்ளஸ் தேவானந்தா சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அதன்படி, அவர் மஹர சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்தார்.  இந்த நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பாதுகாப்பு தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் நேற்று கூறியிருந்தார்.   இந்நிலையில் டக்ளஸ் தேவானந்தாவின் பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் தொடர்பில் இதுவரை எவ்வித சிக்கல்களும் ஏற்படவில்லை என நீதி அமைச்சர்  ஹர்ஷண நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.  அந்த விடயம் தொடர்பில் எவ்வித முறைப்பாடுகளும் இதுவரை பதிவாகவில்லை எனவும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.  எவ்வாறாயினும், டக்ளஸ் தேவானந்தாவின் பாதுகாப்பு தொடர்பில் ஏதேனும் சந்தேகங்கள் அல்லது முறைப்பாடுகள் இருப்பின் அவற்றை முறையாக சமர்பிக்கும் பட்சத்தில், அவற்றை ஆராயந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.  முன்னதாக, இலங்கை இராணுவத்தினால், டக்ளஸ் தேவானந்தாவிற்கு உத்தியோகப்பூர்வமாக வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று வெலிவேரிய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. திட்டமிட்ட குற்றக்குழு தலைவரான மாகந்துரே மதுஷ் வழங்கிய தகவலுக்கு அமையவே குறித்த துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டது.  இந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு வரவழைக்கப்பட்ட போதே, முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டதுடன், எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்

Advertisement

Advertisement

Advertisement