விடுமுறை நாட்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்கப்படும் என இந்தியாவைச் சேர்ந்த இளம் தொழிலதிபர் ஒருவர் அறிவித்துள்ளமை சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது.
சண்டிகரைச் சேர்ந்த 25 வயதான பிரத்தம் ஜிண்டால், தனது நிறுவனத்தின் பணிச்சூழல் தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள பதிவில், ஊழியர்களுக்காக சில வழக்கத்திற்கு மாறான நடைமுறைகளைப் பின்பற்றி வருவதாக தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஒரு ஊழியர் தனது விடுமுறை நாளை விட்டுக்கொடுத்து நிறுவனப் பணிக்காக பணியாற்ற முன்வந்தால், அவருக்கு வழக்கமான ஊதியத்தை விட இரு மடங்கு சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்பதே தனது கொள்கை என அவர் கூறியுள்ளார்.
மேலும், ஒவ்வொரு மாத இறுதியிலும் ஊழியர்களுக்காக அதிக செலவில் கொண்டாட்ட நிகழ்ச்சிகளையும் நடத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
சிறுவயதிலேயே காணொளி தொகுப்பு மற்றும் வரைகலைத் துறையில் ஆர்வம் கொண்ட பிரத்தம் ஜிண்டால், பின்னர் சிறப்பு காட்சித் தொழில்நுட்பப் படிப்பை மேற்கொண்டதாக கூறியுள்ளார்.
யூடியூப் உள்ளடக்க உருவாக்குநர்களுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கிய அவர், தனிப்பட்ட பணிகளில் இருந்து தனது தொழிலை வளர்த்து, தற்போது 50க்கும் மேற்பட்டோர் கொண்ட குழுவை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
விடுமுறை நாட்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்கும் அவரது நடைமுறை தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
விடுமுறையில் வேலை செய்தால் 2 மடங்கு சம்பளம்-ஊழியர்களுக்கு இப்படியொரு சலுகையா விடுமுறை நாட்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்கப்படும் என இந்தியாவைச் சேர்ந்த இளம் தொழிலதிபர் ஒருவர் அறிவித்துள்ளமை சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது.சண்டிகரைச் சேர்ந்த 25 வயதான பிரத்தம் ஜிண்டால், தனது நிறுவனத்தின் பணிச்சூழல் தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள பதிவில், ஊழியர்களுக்காக சில வழக்கத்திற்கு மாறான நடைமுறைகளைப் பின்பற்றி வருவதாக தெரிவித்துள்ளார்.அதன்படி, ஒரு ஊழியர் தனது விடுமுறை நாளை விட்டுக்கொடுத்து நிறுவனப் பணிக்காக பணியாற்ற முன்வந்தால், அவருக்கு வழக்கமான ஊதியத்தை விட இரு மடங்கு சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்பதே தனது கொள்கை என அவர் கூறியுள்ளார்.மேலும், ஒவ்வொரு மாத இறுதியிலும் ஊழியர்களுக்காக அதிக செலவில் கொண்டாட்ட நிகழ்ச்சிகளையும் நடத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.சிறுவயதிலேயே காணொளி தொகுப்பு மற்றும் வரைகலைத் துறையில் ஆர்வம் கொண்ட பிரத்தம் ஜிண்டால், பின்னர் சிறப்பு காட்சித் தொழில்நுட்பப் படிப்பை மேற்கொண்டதாக கூறியுள்ளார்.யூடியூப் உள்ளடக்க உருவாக்குநர்களுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கிய அவர், தனிப்பட்ட பணிகளில் இருந்து தனது தொழிலை வளர்த்து, தற்போது 50க்கும் மேற்பட்டோர் கொண்ட குழுவை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.விடுமுறை நாட்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்கும் அவரது நடைமுறை தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.