• Jul 17 2026

'அபிவிருத்திக் கூட்டங்களை அரசியல் நாடக மேடையாக்க வேண்டாம்' – மீன்பிடி அமைச்சர் கண்டனம்

Chithra / Jul 17th 2026, 9:54 am
image


கிளிநொச்சி மாவட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கவும் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம், சிலரின் பொறுப்பற்ற மற்றும் நாகரிகமற்ற நடத்தையால் இடைநிறுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது வருத்தமளிப்பதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர், மக்களின் வாழ்வாதாரம், உட்கட்டமைப்பு, விவசாயம், மீன்பிடி, கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட முக்கிய அபிவிருத்தி விடயங்கள் விவாதிக்கப்படும் உயர்மட்ட நிர்வாகக் கூட்டங்கள், தனிப்பட்ட அரசியல் நாடகங்களுக்கான மேடைகளாக மாற்றப்படக் கூடாது என வலியுறுத்தியுள்ளார்.


கூட்டங்களில் பங்கேற்பது என்பது வெறுமனே சத்தமிடுவதோ அல்லது குழப்பம் ஏற்படுத்துவதோ அல்ல என்றும், ஜனநாயக மரபுகள், நிர்வாக நடைமுறைகள் மற்றும் அதிகாரிகளின் கௌரவத்தை மதித்து பொறுப்புடன் செயல்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


மேலும், அதிகாரிகள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து அபிவிருத்திப் பணிகளை திசைதிருப்பும் முயற்சிகள் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்றும், அரசியல் இலாபத்திற்காக மக்களின் எதிர்காலத்துடன் விளையாட அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.


"சிலர் குழப்பத்தை உருவாக்கலாம்; ஆனால் நாம் அபிவிருத்தியை உருவாக்குவோம். சிலர் அரசியல் நாடகத்தை அரங்கேற்றலாம்; ஆனால் நாம் மக்களின் வாழ்க்கையை மாற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபடுவோம்" என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். 


இன்றைய சம்பவம், இத்தகைய பொறுப்பற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை அவசியம் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.


'அபிவிருத்திக் கூட்டங்களை அரசியல் நாடக மேடையாக்க வேண்டாம்' – மீன்பிடி அமைச்சர் கண்டனம் கிளிநொச்சி மாவட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கவும் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம், சிலரின் பொறுப்பற்ற மற்றும் நாகரிகமற்ற நடத்தையால் இடைநிறுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது வருத்தமளிப்பதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர், மக்களின் வாழ்வாதாரம், உட்கட்டமைப்பு, விவசாயம், மீன்பிடி, கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட முக்கிய அபிவிருத்தி விடயங்கள் விவாதிக்கப்படும் உயர்மட்ட நிர்வாகக் கூட்டங்கள், தனிப்பட்ட அரசியல் நாடகங்களுக்கான மேடைகளாக மாற்றப்படக் கூடாது என வலியுறுத்தியுள்ளார்.கூட்டங்களில் பங்கேற்பது என்பது வெறுமனே சத்தமிடுவதோ அல்லது குழப்பம் ஏற்படுத்துவதோ அல்ல என்றும், ஜனநாயக மரபுகள், நிர்வாக நடைமுறைகள் மற்றும் அதிகாரிகளின் கௌரவத்தை மதித்து பொறுப்புடன் செயல்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும், அதிகாரிகள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து அபிவிருத்திப் பணிகளை திசைதிருப்பும் முயற்சிகள் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்றும், அரசியல் இலாபத்திற்காக மக்களின் எதிர்காலத்துடன் விளையாட அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்."சிலர் குழப்பத்தை உருவாக்கலாம்; ஆனால் நாம் அபிவிருத்தியை உருவாக்குவோம். சிலர் அரசியல் நாடகத்தை அரங்கேற்றலாம்; ஆனால் நாம் மக்களின் வாழ்க்கையை மாற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபடுவோம்" என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இன்றைய சம்பவம், இத்தகைய பொறுப்பற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை அவசியம் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement