• Apr 28 2026

கிராமப்புறம் என்பதால் கல்வியை புறக்கணிக்காதீர்; கிண்ணியாவில் போராட்டம்!

shanu / Apr 27th 2026, 2:01 pm
image

கிண்ணியா வலயக் கல்வி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட அல் அமீன் மகா வித்தியாலயத்தில் நிலவும் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்யக் கோரி, இன்று (27) காலை பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


சுமார் ஒரு மணிநேரம் நீடித்த இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில், ஆசிரியர் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும், பாடசாலை ஆசிரியர்களின் இடமாற்றங்களை நிறுத்த வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினர்.


 "கிராமப்புறம் என்பதால் மாணவர்களின் கல்வி உரிமையை புறக்கணிக்கக் கூடாது" எனத் தெரிவித்ததுடன், கணிதம், தமிழ் மற்றும் விஞ்ஞானப் பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.


தங்கள் பாடசாலை தேசிய மட்டத்தில் பல சாதனைகளைப் படைத்த ஒரு சிறந்த கல்வி நிறுவனம் என்பதை வலியுறுத்திய பெற்றோர்கள், இவ்வாறான நிலையில் கல்வி அதிகாரிகள் பாடசாலையின் ஆசிரியர் தேவைகளைக் கவனத்தில் கொள்ளாமல் இருப்பது கவலைக்குரியது எனத் தெரிவித்தனர்.


ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், கிண்ணியா வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள் குழுவினர் ஸ்தலத்திற்கு வருகை தந்து பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.


மாணவர்களின் கல்வி பாதிப்படையக்கூடாது என்பதால், அவர்களை மீண்டும் வகுப்புகளுக்குத் திரும்புமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, மாணவர்கள் வகுப்புகளுக்குச் சென்றனர்.


தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, பெற்றோர்கள் முன்வைத்த ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சினையை உரிய அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்று, அதற்கான நிரந்தரத் தீர்வைப் பெற்றுத் தருவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.


இது குறித்துக் கருத்துத் தெரிவித்த பாடசாலை அதிபர் ஜே. எம். ராபிக் , பாடசாலையில் கணிதம், தமிழ், விஞ்ஞானம் மற்றும் ஆரம்பக் கல்வி பிரிவுகள் எனப் பல பாடங்களுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறையாக இருப்பதாகவும், இது மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளைப் பெருமளவில் பாதிப்பதாகவும் தெரிவித்தார்.


அதிகாரிகளின் உறுதியான வாக்குறுதியை அடுத்து, போராட்டம் சுமூகமாகக் கைவிடப்பட்டது.

கிராமப்புறம் என்பதால் கல்வியை புறக்கணிக்காதீர்; கிண்ணியாவில் போராட்டம் கிண்ணியா வலயக் கல்வி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட அல் அமீன் மகா வித்தியாலயத்தில் நிலவும் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்யக் கோரி, இன்று (27) காலை பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.சுமார் ஒரு மணிநேரம் நீடித்த இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில், ஆசிரியர் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும், பாடசாலை ஆசிரியர்களின் இடமாற்றங்களை நிறுத்த வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினர். "கிராமப்புறம் என்பதால் மாணவர்களின் கல்வி உரிமையை புறக்கணிக்கக் கூடாது" எனத் தெரிவித்ததுடன், கணிதம், தமிழ் மற்றும் விஞ்ஞானப் பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.தங்கள் பாடசாலை தேசிய மட்டத்தில் பல சாதனைகளைப் படைத்த ஒரு சிறந்த கல்வி நிறுவனம் என்பதை வலியுறுத்திய பெற்றோர்கள், இவ்வாறான நிலையில் கல்வி அதிகாரிகள் பாடசாலையின் ஆசிரியர் தேவைகளைக் கவனத்தில் கொள்ளாமல் இருப்பது கவலைக்குரியது எனத் தெரிவித்தனர்.ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், கிண்ணியா வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள் குழுவினர் ஸ்தலத்திற்கு வருகை தந்து பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.மாணவர்களின் கல்வி பாதிப்படையக்கூடாது என்பதால், அவர்களை மீண்டும் வகுப்புகளுக்குத் திரும்புமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, மாணவர்கள் வகுப்புகளுக்குச் சென்றனர்.தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, பெற்றோர்கள் முன்வைத்த ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சினையை உரிய அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்று, அதற்கான நிரந்தரத் தீர்வைப் பெற்றுத் தருவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.இது குறித்துக் கருத்துத் தெரிவித்த பாடசாலை அதிபர் ஜே. எம். ராபிக் , பாடசாலையில் கணிதம், தமிழ், விஞ்ஞானம் மற்றும் ஆரம்பக் கல்வி பிரிவுகள் எனப் பல பாடங்களுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறையாக இருப்பதாகவும், இது மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளைப் பெருமளவில் பாதிப்பதாகவும் தெரிவித்தார்.அதிகாரிகளின் உறுதியான வாக்குறுதியை அடுத்து, போராட்டம் சுமூகமாகக் கைவிடப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement