மன்னார் இலுப்பைக்கடவை கடற்பகுதிக்கு கூட்டமாக வருகை தந்த டொல்பின்கள் தற்போது இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, தொண்டி கடலோரப் பகுதிகளுக்கு சென்ற நிலையில் இன்று(18) காலை முதல் குறித்த டொல்பின் கூட்டம் கூட்டமாக கரையோர பகுதிகளுக்கு வருகை தந்துள்ளன.
இந்த அற்புதமான காட்சி அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
அரிதாகவே நிகழும் இத்தகைய நிகழ்வு, பல டொல்பின்கள் ஒரே நேரத்தில் துள்ளி குதித்து நீந்துவது, காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இத்தகைய ஒரு நிகழ்வு, அதாவது இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான டொல்பின்கள் ஒரே நேரத்தில் கடலோர பகுதிக்கு வந்து துள்ளி குதிப்பது, இதுவே முதல்முறை என்று அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் தெரிவித்தனர்.
இந்த இயற்கை நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இராமநாதபுரம் கடற்கரையில் துள்ளி குதித்து நீந்தும் டொல்பின்கள்; ஆச்சரியத்துடன் ரசித்து வரும் மக்கள் மன்னார் இலுப்பைக்கடவை கடற்பகுதிக்கு கூட்டமாக வருகை தந்த டொல்பின்கள் தற்போது இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, தொண்டி கடலோரப் பகுதிகளுக்கு சென்ற நிலையில் இன்று(18) காலை முதல் குறித்த டொல்பின் கூட்டம் கூட்டமாக கரையோர பகுதிகளுக்கு வருகை தந்துள்ளன. இந்த அற்புதமான காட்சி அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளன. அரிதாகவே நிகழும் இத்தகைய நிகழ்வு, பல டொல்பின்கள் ஒரே நேரத்தில் துள்ளி குதித்து நீந்துவது, காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.இத்தகைய ஒரு நிகழ்வு, அதாவது இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான டொல்பின்கள் ஒரே நேரத்தில் கடலோர பகுதிக்கு வந்து துள்ளி குதிப்பது, இதுவே முதல்முறை என்று அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் தெரிவித்தனர். இந்த இயற்கை நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.