• Apr 24 2026

சர்வதேச கடற்பரப்புக்கு செல்ல வேண்டாம்! இலங்கை மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை

Chithra / Mar 5th 2026, 6:47 pm
image

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து மீனவ சமூகத்தினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். 

சர்வதேச கடற்பரப்பில் நிலவும் அபாயகரமான சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 

உலகில் தற்போது நிலவும் அமைதியற்ற சூழ்நிலை காரணமாக, சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடிக்கும் இலங்கை மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்  தலைமையில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடைபெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர், 

தற்போது கடலுக்குச் சென்றுள்ள மீனவர்கள் எக்காரணம் கொண்டும் சட்டவிரோத பயண வழிகளைப் பயன்படுத்தவோ அல்லது அறிமுகமில்லாத வலயங்களுக்குள் நுழைவதையோ தவிர்க்குமாறு வலியுறுத்தினார். 

மீனவ மக்களின் உயிர் பாதுகாப்பிற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் எப்போதும் தமது வழமையான மற்றும் அனுமதிக்கப்பட்ட பயண வழிகளை மாத்திரமே பயன்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் உறுதியாகக் கேட்டுக்கொண்டார்.

கடலில் ஏதேனும் ஆபத்தான நிலைமையோ அல்லது அவசர நிலையோ ஏற்பட்டால், 24 மணி நேரமும் செயற்படும் MRCC நிலையத்துடன் அல்லது கடற்றொழில் திணைக்களத்தின் தகவல் தொடர்பு கட்டமைப்புடன் உடனடியாகத் தொடர்புகொள்ளுமாறு அமைச்சர் அனைத்து மீனவர்களையும் படகு உரிமையாளர்களையும் கேட்டுக்கொள்கின்றார்.


சர்வதேச கடற்பரப்புக்கு செல்ல வேண்டாம் இலங்கை மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து மீனவ சமூகத்தினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். சர்வதேச கடற்பரப்பில் நிலவும் அபாயகரமான சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். உலகில் தற்போது நிலவும் அமைதியற்ற சூழ்நிலை காரணமாக, சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடிக்கும் இலங்கை மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்  தலைமையில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடைபெற்றது.இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர், தற்போது கடலுக்குச் சென்றுள்ள மீனவர்கள் எக்காரணம் கொண்டும் சட்டவிரோத பயண வழிகளைப் பயன்படுத்தவோ அல்லது அறிமுகமில்லாத வலயங்களுக்குள் நுழைவதையோ தவிர்க்குமாறு வலியுறுத்தினார். மீனவ மக்களின் உயிர் பாதுகாப்பிற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் எப்போதும் தமது வழமையான மற்றும் அனுமதிக்கப்பட்ட பயண வழிகளை மாத்திரமே பயன்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் உறுதியாகக் கேட்டுக்கொண்டார்.கடலில் ஏதேனும் ஆபத்தான நிலைமையோ அல்லது அவசர நிலையோ ஏற்பட்டால், 24 மணி நேரமும் செயற்படும் MRCC நிலையத்துடன் அல்லது கடற்றொழில் திணைக்களத்தின் தகவல் தொடர்பு கட்டமைப்புடன் உடனடியாகத் தொடர்புகொள்ளுமாறு அமைச்சர் அனைத்து மீனவர்களையும் படகு உரிமையாளர்களையும் கேட்டுக்கொள்கின்றார்.

Advertisement

Advertisement

Advertisement