• May 23 2026

நுவரெலியாவில் 2025/2026 பருவகாலம் தொடர்பான கலந்துரையாடல்!

shanu / Oct 31st 2025, 10:44 pm
image

நுவரெலியாவில்  2025/2026 ஆம் ஆண்டு பருவகாலம் தொடர்பான  கலந்துரையாடல் நல்லதண்ணி நகரில் உள்ள பொது சுகாதார அதிகாரிகள் கேட்போர் கூடத்தில் சிவனடி பாத மலைக்கு பொறுப்பான விகாராதிபதி பெங்கமுவே தம்மதின்ன  தலைமையில்  இன்று இடம்பெற்றது .


இம் முறை சிவனடி பாத மலைக்கு வரும் யாத்ரீகர்கள் எவ்வாறு வர வேண்டும் என்பது பற்றிய கலந்துரையாடல் நடைபெற்று பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.


மதுபான வகைகள், போதைப் பொருள்,பீடி,சுருட்டு, சிகரெட், பொலித்தீன், பிளாஸ்டிக் வெற்று போத்தல்கள் உக்கா பொருட்கள் கொண்டு செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் மலைக்கு செல்லும் வீதியில் சுத்தமான குடிநீர் இலவசமாக ஒவ்வொரு குழாய்களிலும் வழங்க நடவடிக்கை எடுத்து உள்ளதால் பிளாஸ்டிக் போத்தள்களில் குடிநீர் எடுத்து செல்ல வேண்டாம் என யாத்திரியர்களுக்கு பணிக்கப்பட்டு உள்ளது.


எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ஆம் திகதி பௌர்ணமி நாள் முதல் சிவனடிபாத மலை பருவகாலம் ஆரம்பமாகி 2026 ம் ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதி வரும் வைகாசி விசாகம் பௌர்ணமி நாளில் பருவகாலம் நிறைவு பெரும்.


அதற்கான முழு ஏற்பாகளை அந்த அந்த அரச நிறுவனங்கள் மேற் கொள்ள நடவடிக்கை எடுக்க பட்டு உள்ளது.


இறுதியாக சிவனடி பாத மலைக்கு பொறுப்பான விகாராதிபதி பெங்கமுவே தம்மதின்ன அவர்களின் உரையுடன் நிறைவு பெற்றது.


நிகழ்வில் நுவரெலியா மாவட்ட ஆட்சியர் நோர்வூட் பிரதேச செயலாளர் அம்பகமு பிரதேச செயலாளர் சுகாதார வைத்திய அதிகாரி பொது சுகாதார அதிகாரிகள் ஹட்டன் அரச பேருந்து நிலையம் அதிகாரிகள் அவிஸ்சாவலை அரச பேருந்து நிலையம் அதிகாரிகள் தனியார் பேருந்து நிலையம் அதிகாரிகள் ஹட்டன் புகையிரத நிலையம் அதிகாரிகள் மின்சார சபை அதிகாரிகள் தேசிய நீர் வழங்கல் துறை அதிகாரிகள் வன துறை அதிகாரிகள் மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் உதவி தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் அம்மகமு பிரதேச சபையின் தவிசாளர் கினிக்கத்தேன வட்டவளை நோட்டன் பிரிட்ஜ் ஹட்டன் நோர்வூட் பொகவந்தலாவ பொல்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மஸ்கெலியா நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் நுவரெலியா மாவட்ட விலை கட்டுப்பாட்டு அதிகாரிகள் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் கலால் துறை அதிகாரிகள் நல்லதண்ணி கிராம உத்தியோகத்தர் நல்லதண்ணி நகரில் உள்ள விருந்தினர் விடுதி உரிமையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சுமை தூக்கும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். 



நுவரெலியாவில் 2025/2026 பருவகாலம் தொடர்பான கலந்துரையாடல் நுவரெலியாவில்  2025/2026 ஆம் ஆண்டு பருவகாலம் தொடர்பான  கலந்துரையாடல் நல்லதண்ணி நகரில் உள்ள பொது சுகாதார அதிகாரிகள் கேட்போர் கூடத்தில் சிவனடி பாத மலைக்கு பொறுப்பான விகாராதிபதி பெங்கமுவே தம்மதின்ன  தலைமையில்  இன்று இடம்பெற்றது .இம் முறை சிவனடி பாத மலைக்கு வரும் யாத்ரீகர்கள் எவ்வாறு வர வேண்டும் என்பது பற்றிய கலந்துரையாடல் நடைபெற்று பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.மதுபான வகைகள், போதைப் பொருள்,பீடி,சுருட்டு, சிகரெட், பொலித்தீன், பிளாஸ்டிக் வெற்று போத்தல்கள் உக்கா பொருட்கள் கொண்டு செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.அத்துடன் மலைக்கு செல்லும் வீதியில் சுத்தமான குடிநீர் இலவசமாக ஒவ்வொரு குழாய்களிலும் வழங்க நடவடிக்கை எடுத்து உள்ளதால் பிளாஸ்டிக் போத்தள்களில் குடிநீர் எடுத்து செல்ல வேண்டாம் என யாத்திரியர்களுக்கு பணிக்கப்பட்டு உள்ளது.எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ஆம் திகதி பௌர்ணமி நாள் முதல் சிவனடிபாத மலை பருவகாலம் ஆரம்பமாகி 2026 ம் ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதி வரும் வைகாசி விசாகம் பௌர்ணமி நாளில் பருவகாலம் நிறைவு பெரும்.அதற்கான முழு ஏற்பாகளை அந்த அந்த அரச நிறுவனங்கள் மேற் கொள்ள நடவடிக்கை எடுக்க பட்டு உள்ளது.இறுதியாக சிவனடி பாத மலைக்கு பொறுப்பான விகாராதிபதி பெங்கமுவே தம்மதின்ன அவர்களின் உரையுடன் நிறைவு பெற்றது.நிகழ்வில் நுவரெலியா மாவட்ட ஆட்சியர் நோர்வூட் பிரதேச செயலாளர் அம்பகமு பிரதேச செயலாளர் சுகாதார வைத்திய அதிகாரி பொது சுகாதார அதிகாரிகள் ஹட்டன் அரச பேருந்து நிலையம் அதிகாரிகள் அவிஸ்சாவலை அரச பேருந்து நிலையம் அதிகாரிகள் தனியார் பேருந்து நிலையம் அதிகாரிகள் ஹட்டன் புகையிரத நிலையம் அதிகாரிகள் மின்சார சபை அதிகாரிகள் தேசிய நீர் வழங்கல் துறை அதிகாரிகள் வன துறை அதிகாரிகள் மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் உதவி தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் அம்மகமு பிரதேச சபையின் தவிசாளர் கினிக்கத்தேன வட்டவளை நோட்டன் பிரிட்ஜ் ஹட்டன் நோர்வூட் பொகவந்தலாவ பொல்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மஸ்கெலியா நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் நுவரெலியா மாவட்ட விலை கட்டுப்பாட்டு அதிகாரிகள் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் கலால் துறை அதிகாரிகள் நல்லதண்ணி கிராம உத்தியோகத்தர் நல்லதண்ணி நகரில் உள்ள விருந்தினர் விடுதி உரிமையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சுமை தூக்கும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். 

Advertisement

Advertisement

Advertisement