2025 ஆம் ஆண்டுக்கான வடமாகாண பண்பாட்டுப் பெருவிழா எதிர்வரும் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பில் நடைபெறவுள்ளது.
இதற்கான முன்னாயத்தக் கலந்துரையாடல் நேற்றைய தினம் மு.ப 10.00 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட செயலக அரியாத்தை மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமா மகேஸ்வரன் அவர்களின் தலைமையிலும் வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திரு. பற்றிக் டிறஞ்சன் அவர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.
குறித்த விழாவுக்கான கலை நிகழ்வுகள், ஊர்திகள், விருதுகள், பண்பாட்டு கண்காட்சி முதலான முக்கிய முன்னாயத்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இந்தக் மாவட்ட கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.ச.மஞ்சுளாதேவி, வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களின் கலாசார உத்தியோகத்தர்கள், பிரதேச கலாசார உத்தியோகத்தர்கள் முதலானோர் கலந்துகொண்டனர்.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல். 2025 ஆம் ஆண்டுக்கான வடமாகாண பண்பாட்டுப் பெருவிழா எதிர்வரும் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பில் நடைபெறவுள்ளது.இதற்கான முன்னாயத்தக் கலந்துரையாடல் நேற்றைய தினம் மு.ப 10.00 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட செயலக அரியாத்தை மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமா மகேஸ்வரன் அவர்களின் தலைமையிலும் வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திரு. பற்றிக் டிறஞ்சன் அவர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.குறித்த விழாவுக்கான கலை நிகழ்வுகள், ஊர்திகள், விருதுகள், பண்பாட்டு கண்காட்சி முதலான முக்கிய முன்னாயத்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.இந்தக் மாவட்ட கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.ச.மஞ்சுளாதேவி, வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களின் கலாசார உத்தியோகத்தர்கள், பிரதேச கலாசார உத்தியோகத்தர்கள் முதலானோர் கலந்துகொண்டனர்.