மாத்தளை, பிடகந்த தோட்டத்தில் உள்ள பழைய தேயிலைத் தொழிற்சாலைக்கு அருகிலுள்ள வாய்க்காலில், புதிதாகப் பிறந்த சிசு ஒன்று வீசப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கந்தேனுவர பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சிசு மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சிசுவானது மாத்தளை பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிசுவின் பெற்றோர் தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை என்பதோடு மேலதிக விசாரணைகளை கந்தேனுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், இப்பலோகம பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற குடும்ப சுகாதார ஊழியரின் வீட்டில், முன் நாற்காலியில் வைக்கப்பட்ட நிலையில் ஒரு மாதம் வயதுடைய சிசு ஒன்று அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த சிசு, நிகவெரட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிறந்த உடல் ஆரோக்கியத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாய்க்காலில் வீசப்பட்ட புதிதாகப் பிறந்த சிசு கண்டுபிடிப்பு மாத்தளை, பிடகந்த தோட்டத்தில் உள்ள பழைய தேயிலைத் தொழிற்சாலைக்கு அருகிலுள்ள வாய்க்காலில், புதிதாகப் பிறந்த சிசு ஒன்று வீசப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கந்தேனுவர பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சிசு மீட்கப்பட்டுள்ளது.குறித்த சிசுவானது மாத்தளை பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சிசுவின் பெற்றோர் தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை என்பதோடு மேலதிக விசாரணைகளை கந்தேனுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், இப்பலோகம பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற குடும்ப சுகாதார ஊழியரின் வீட்டில், முன் நாற்காலியில் வைக்கப்பட்ட நிலையில் ஒரு மாதம் வயதுடைய சிசு ஒன்று அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அந்த சிசு, நிகவெரட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிறந்த உடல் ஆரோக்கியத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.