• May 06 2025

தேர்தல் விதிமுறைகளை மீறினாரா பிரதமர்? விசாரணைக்கு தயாராகும் தேர்தல்கள் ஆணைக்குழு

Chithra / May 6th 2025, 11:09 am
image

 

பிரதமர் ஹரிணி அமரசூரிய தேர்தல் விதிமுறைகளை மீறினார் என்ற குற்றச்சாட்டுகள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தேர்தல் ஆணையாளருக்கு இது தொடர்பில் பவ்ரல் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது.

மே 3ம் திகதிக்கு பின்னரும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுமாறு தனது ஆதரவாளர்களை கேட்டுக்கொள்ளும் விதத்தில் எவ்வாறு பிரதமர் கருத்து வெளியிட்டார் என்பதை நாங்கள் அவதானித்துள்ளோம்.

பிரதமரின் கூற்றுதனது ஆதரவாளர்களை தேர்தல் விதிமுறைகளை மீறுமாறு உற்சாகப்படுத்தும் விதத்தில் காணப்படுகின்றது.

அதேவேளை அவர் தேர்தல் விதிமுறைகளை அலட்சியம் செய்துள்ளார் என பவ்ரல் தெரிவித்துள்ளது.


இந்நிலையில் உள்ளுராட்சி தேர்தல்கள் அமைதிக்காலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபடுமாறு தனது ஆதரவாளர்களிற்கு வேண்டுகோள் விடுத்ததன் மூலம் ஹரிணி அமரசூரிய தேர்தல் விதிமுறைகளை மீறினாரா என்பது குறித்து விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பிரதமர் தெரிவித்துள்ள விடயங்களை   தனது சட்டதிணைக்களத்திற்கு முதலில் அனுப்பி விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


தேர்தல் விதிமுறைகளை மீறினாரா பிரதமர் விசாரணைக்கு தயாராகும் தேர்தல்கள் ஆணைக்குழு  பிரதமர் ஹரிணி அமரசூரிய தேர்தல் விதிமுறைகளை மீறினார் என்ற குற்றச்சாட்டுகள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் வேண்டுகோள் விடுத்துள்ளது.தேர்தல் ஆணையாளருக்கு இது தொடர்பில் பவ்ரல் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது.மே 3ம் திகதிக்கு பின்னரும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுமாறு தனது ஆதரவாளர்களை கேட்டுக்கொள்ளும் விதத்தில் எவ்வாறு பிரதமர் கருத்து வெளியிட்டார் என்பதை நாங்கள் அவதானித்துள்ளோம்.பிரதமரின் கூற்றுதனது ஆதரவாளர்களை தேர்தல் விதிமுறைகளை மீறுமாறு உற்சாகப்படுத்தும் விதத்தில் காணப்படுகின்றது.அதேவேளை அவர் தேர்தல் விதிமுறைகளை அலட்சியம் செய்துள்ளார் என பவ்ரல் தெரிவித்துள்ளது.இந்நிலையில் உள்ளுராட்சி தேர்தல்கள் அமைதிக்காலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபடுமாறு தனது ஆதரவாளர்களிற்கு வேண்டுகோள் விடுத்ததன் மூலம் ஹரிணி அமரசூரிய தேர்தல் விதிமுறைகளை மீறினாரா என்பது குறித்து விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.பிரதமர் தெரிவித்துள்ள விடயங்களை   தனது சட்டதிணைக்களத்திற்கு முதலில் அனுப்பி விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement