• Aug 27 2026

நேபாளம், சீனாவில் பேரழிவு வெள்ளம்! உதவிக்கரம் நீட்டும் ஐ.நா

Aathira / Aug 27th 2026, 8:37 am
image

நேபாளம் மற்றும் சீனாவில் பெரும் உயிரிழப்புகளையும், பலர் காணாமல் போகும் நிலைமையையும் ஏற்படுத்தியுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கு தொடர்பில் மிகுந்த வேதனையடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.

வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த பேரழிவால் பாதிக்கப்பட்ட அனைவருடனும் தான் துணை நிற்பதாகத் தெரிவித்துள்ள குட்டெரெஸ், நேபாள அரசாங்கத்தின் தலைமையிலான மீட்புப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் ஐ.நா. குழுக்களும் அதன் பங்காளி அமைப்புகளும் நிவாரணப் பொருட்கள் மற்றும் பணியாளர்களைத் திரட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதில் சர்வதேச ஒத்துழைப்பு தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேபாளம், சீனாவில் பேரழிவு வெள்ளம் உதவிக்கரம் நீட்டும் ஐ.நா நேபாளம் மற்றும் சீனாவில் பெரும் உயிரிழப்புகளையும், பலர் காணாமல் போகும் நிலைமையையும் ஏற்படுத்தியுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கு தொடர்பில் மிகுந்த வேதனையடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.மேலும், இந்த பேரழிவால் பாதிக்கப்பட்ட அனைவருடனும் தான் துணை நிற்பதாகத் தெரிவித்துள்ள குட்டெரெஸ், நேபாள அரசாங்கத்தின் தலைமையிலான மீட்புப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் ஐ.நா. குழுக்களும் அதன் பங்காளி அமைப்புகளும் நிவாரணப் பொருட்கள் மற்றும் பணியாளர்களைத் திரட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதில் சர்வதேச ஒத்துழைப்பு தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement