சம்பள சீர்திருத்தத்தில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் புறக்கணிக்கப்படுவதாக தெரிவித்து நாடு முழுவதும் உள்ள அரச பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுத்துள்ளனர்.
அதற்கமைய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களும் இன்று பல்கலை வளாகத்தில் அடையாள நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது “ஒப்புக்கொள்ளப்பட்ட MCA கொடுப்பனவை உடனடியாக வழங்கு” 'நீக்கிவிடப்பட்ட 20% ஐ உடனடியாக வழங்கு” , “அதிகரிக்கப்பட்ட இடர் கடனை உடனடியாக வழங்கு” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு போர்ட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத்தொடர்ந்து யாழ்ப்பாண ஊழியர் சங்கத் தலைவரும் அனைத்துப் பல்கலைக்கழக ஊழியர் சம்மேளனம் மற்றும் கூட்டுக்குழுவின் செயலாளர் யசோதன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,
சம்பள சீர்திருத்தம் தொடர்பில் கல்வி அமைச்சருடன் கலந்துரையாடி இணக்கம் எட்டப்பட்டும் இதுவரை இதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சம்பள சீர்திருத்தத்திற்கு நடவடிக்கை எடுக்காவிடின் தொடர்ச்சியாக அடையாள நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுப்போம் - என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாடு முழுவதும் உள்ள 17 அரச பல்கலைக்கழகங்கள் இன்று இந்த அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.
கல்வி அமைச்சரை சந்தித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை; கல்விசாரா ஊழியர்கள் இன்று அடையாள வேலைநிறுத்தம் சம்பள சீர்திருத்தத்தில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் புறக்கணிக்கப்படுவதாக தெரிவித்து நாடு முழுவதும் உள்ள அரச பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுத்துள்ளனர். அதற்கமைய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களும் இன்று பல்கலை வளாகத்தில் அடையாள நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதன்போது “ஒப்புக்கொள்ளப்பட்ட MCA கொடுப்பனவை உடனடியாக வழங்கு” 'நீக்கிவிடப்பட்ட 20% ஐ உடனடியாக வழங்கு” , “அதிகரிக்கப்பட்ட இடர் கடனை உடனடியாக வழங்கு” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு போர்ட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து யாழ்ப்பாண ஊழியர் சங்கத் தலைவரும் அனைத்துப் பல்கலைக்கழக ஊழியர் சம்மேளனம் மற்றும் கூட்டுக்குழுவின் செயலாளர் யசோதன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், சம்பள சீர்திருத்தம் தொடர்பில் கல்வி அமைச்சருடன் கலந்துரையாடி இணக்கம் எட்டப்பட்டும் இதுவரை இதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சம்பள சீர்திருத்தத்திற்கு நடவடிக்கை எடுக்காவிடின் தொடர்ச்சியாக அடையாள நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுப்போம் - என்று தெரிவித்துள்ளார். இதேவேளை நாடு முழுவதும் உள்ள 17 அரச பல்கலைக்கழகங்கள் இன்று இந்த அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.