• Jun 22 2026

டெங்கு பரவல் தீவிரம்: அபாய வலயங்கள் 112 ஆக உயர்வு – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

Chithra / Jun 21st 2026, 12:14 pm
image


நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் மேலும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகளின் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள்ளது.


மஹரகம சுகாதார வைத்திய பகுதியில் அதிகளவிலான டெங்கு நோயாளிகள் பதிவாகி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேவேளை, களுத்துறை மாவட்டத்தின் பாணந்துறை மற்றும் கம்பஹா மாவட்டத்தின் பியகம பகுதிகளிலும் தொற்று வேகமாகப் பரவி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக கொழும்பு மாவட்டம், கம்பஹா மாவட்டம், மாத்தறை மாவட்டம், காலி மாவட்டம், கண்டி மாவட்டம், இரத்தினபுர மாவட்டம் மற்றும் களுத்துறை மாவட்டம் ஆகியவை அடையாளம்  காணப்பட்டுள்ளதாக விசேட நிபுணர் டொக்டர் பிரஷில சமரவீர (Prashila Samaraweera) தெரிவித்துள்ளார்.


அரசாங்கத்தின் தலையீடு மற்றும் தொடர்ச்சியான டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டங்கள் இருந்தபோதிலும், நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை அகற்றுவதில் சமூகத்தின் அலட்சியம் ஒரு பெரும் சவாலாக நீடிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.


மேலும் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் அதிகமாக இருப்பதால், இந்த வார இறுதியில் தங்கள் சுற்றுப்புறங்களைச் சுத்தம் செய்வதற்கு முன்னுரிமை அளிக்குமாறு டொக்டர் சமரவீர பொதுமக்களை வலியுறுத்தினார்.


இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 45,000 க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

டெங்கு பரவல் தீவிரம்: அபாய வலயங்கள் 112 ஆக உயர்வு – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் மேலும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகளின் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள்ளது.மஹரகம சுகாதார வைத்திய பகுதியில் அதிகளவிலான டெங்கு நோயாளிகள் பதிவாகி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேவேளை, களுத்துறை மாவட்டத்தின் பாணந்துறை மற்றும் கம்பஹா மாவட்டத்தின் பியகம பகுதிகளிலும் தொற்று வேகமாகப் பரவி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக கொழும்பு மாவட்டம், கம்பஹா மாவட்டம், மாத்தறை மாவட்டம், காலி மாவட்டம், கண்டி மாவட்டம், இரத்தினபுர மாவட்டம் மற்றும் களுத்துறை மாவட்டம் ஆகியவை அடையாளம்  காணப்பட்டுள்ளதாக விசேட நிபுணர் டொக்டர் பிரஷில சமரவீர (Prashila Samaraweera) தெரிவித்துள்ளார்.அரசாங்கத்தின் தலையீடு மற்றும் தொடர்ச்சியான டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டங்கள் இருந்தபோதிலும், நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை அகற்றுவதில் சமூகத்தின் அலட்சியம் ஒரு பெரும் சவாலாக நீடிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.மேலும் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் அதிகமாக இருப்பதால், இந்த வார இறுதியில் தங்கள் சுற்றுப்புறங்களைச் சுத்தம் செய்வதற்கு முன்னுரிமை அளிக்குமாறு டொக்டர் சமரவீர பொதுமக்களை வலியுறுத்தினார்.இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 45,000 க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement