• Apr 17 2026

செம்மணி எலும்புக்கூடுகளுக்கு நீதி கோரி - திருமலையில் தீபந்த போராட்டம்!

Thansita / Jun 29th 2025, 10:52 pm
image

திருகோணமலை பத்தாம் குறிச்சியில் இன்று (29) மாலை அணையா விளக்கு தீப்பந்த போராட்டம் இடம்பெற்றது.

செம்மணி மனிதப் புதைகுழியில் அகழப்பட்டு வருகின்ற மனித எலும்புக்கூடுகள் தொடர்பில் முறையான விசாரணை மேற்கொண்டு அதற்கான நீதியை வலியுறுத்தி திருகோணமலை பட்டணத்தெரு மக்களால் குறித்த தீப்பந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


குறித்த நிகழ்வில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட சங்கங்களின் பிரதிநிதிகள்  கிராம மக்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது சுடர்கள் ஏற்றப்பட்டு பின்பு தீபந்தங்களை கைகளில் ஏந்தி  ஊர்சுற்றி  கடற்கரைக்கு கொண்டு சென்று கடலில் விடப்பட்டன.


செம்மணி எலும்புக்கூடுகளுக்கு நீதி கோரி - திருமலையில் தீபந்த போராட்டம் திருகோணமலை பத்தாம் குறிச்சியில் இன்று (29) மாலை அணையா விளக்கு தீப்பந்த போராட்டம் இடம்பெற்றது.செம்மணி மனிதப் புதைகுழியில் அகழப்பட்டு வருகின்ற மனித எலும்புக்கூடுகள் தொடர்பில் முறையான விசாரணை மேற்கொண்டு அதற்கான நீதியை வலியுறுத்தி திருகோணமலை பட்டணத்தெரு மக்களால் குறித்த தீப்பந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.குறித்த நிகழ்வில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட சங்கங்களின் பிரதிநிதிகள்  கிராம மக்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.இதன்போது சுடர்கள் ஏற்றப்பட்டு பின்பு தீபந்தங்களை கைகளில் ஏந்தி  ஊர்சுற்றி  கடற்கரைக்கு கொண்டு சென்று கடலில் விடப்பட்டன.

Advertisement

Advertisement

Advertisement