இலங்கையின் பல பகுதிகளில் இன்று (5) பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது பலத்த மின்னல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகக் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று முற்பகல் 11 மணியளவில் வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவித்தல், நாளை (6) அதிகாலை 1 மணி வரை அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வடமேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா, மேல், தென் மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும், மன்னார் மாவட்டத்திற்கும் பலத்த மின்னல் தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைத் தவிர்ப்பதற்காக பொதுமக்கள் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
18 மாவட்டங்களுக்கு நாளை வரை காத்திருக்கும் ஆபத்து RED ALERT இலங்கையின் பல பகுதிகளில் இன்று (5) பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது பலத்த மின்னல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகக் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இன்று முற்பகல் 11 மணியளவில் வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவித்தல், நாளை (6) அதிகாலை 1 மணி வரை அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, வடமேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா, மேல், தென் மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும், மன்னார் மாவட்டத்திற்கும் பலத்த மின்னல் தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும், குறித்த பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.எனவே, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைத் தவிர்ப்பதற்காக பொதுமக்கள் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.