• May 20 2026

வவுனியா நெளுக்குளத்தில் கட்டாக்காலி மாடுகளினால் தினசரி விபத்துக்கள்:தூங்குகிறதா பிரதேச சபை?

Ziya / May 20th 2026, 3:36 pm
image

வவுனியா நெளுக்குளம் மற்றும் அதனைச் சூழவுள்ள முக்கிய வீதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டத்தினால் விபத்துக்கள் பாரியளவில் அதிகரித்துள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


நெளுக்குளம், குழுமாட்டுசந்தி, இராசேந்திரகுளம், பூவரசங்குளம் மற்றும் மரக்காரம்பளை வீதி ஆகிய பகுதிகளில் இந்த அபாயகரமான சூழ்நிலை தொடர்கின்ற போதிலும், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை இது குறித்து எவ்விதமான உறுதியான நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


பகலில் மட்டுமன்றி, இரவு நேரங்களில் இந்த மாடுகள் பிரதான வீதிகளின் நடுவே கூட்டமாகப் படுத்துறங்குவதால், அவ்வீதிகளினூடாகப் பயணிக்கும் வாகன ஓட்டிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.


போதிய வீதி மின்விளக்குகள் இல்லாத பகுதிகளில், கருமை நிறமுடைய மாடுகள் வீதியில் நிற்பது தூரத்திலிருந்து வருவதற்குக் தெரிவதில்லை. இதனால் தினசரி விபத்துக்கள் இடம்பெறுவது வாடிக்கையாகிவிட்டது.


கடந்த இரு தினங்களுக்கு முன்னர்கூட, மரக்காரம்பளை வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் நின்ற கட்டாக்காலி மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் கடுமையான காயங்களுக்குள்ளாகியுள்ளார்.


இலங்கையின் சட்ட நெறிமுறைகளின்படி, பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில் கால்நடைகளை வீதிகளில் அலைந்து திரியவிடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளூர் அதிகார சபைகளுக்கு (பிரதேச சபைகள் மற்றும் நகர சபைகள்) முழுமையான அதிகாரம் உண்டு.


வீதிகளில் திரியும் மாடுகளைக் கைப்பற்றி, பட்டிக்குள் அடைத்து, அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் அதிகாரம் உள்ளூர் சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. பொது வீதிகளில் கால்நடைகளை அலைந்து திரிய விடுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.


பொதுமக்களினால் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கு பலமுறை முறைப்பாடுகள் வழங்கப்பட்டும், இதுவரை மாடுகளின் உரிமையாளர்களுக்கு எதிராகவோ அல்லது மாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.


கட்டாக்காலி மாடுகளின் உரிமையாளர்கள் தங்களது கால்நடைகளை முறையாகப் பராமரிக்காமல் வீதிகளில் விடுவதே இவ்விபத்துகளுக்கு முதன்மைக் காரணமாகும்.


எனவே, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை மற்றும் பொலிஸார் உடனடியாக இவ்விடயத்தில் தலையிட்டு, வீதிகளில் திரியும் மாடுகளைக் கைப்பற்றி உரிமையாளர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க வேண்டும் இனிமேலும் தாமதிக்காது, பெறுமதியான மனித உயிர்கள் பலியாவதற்கு முன்னர் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த வவுனியா மக்களின் எதிர்பார்ப்பாகும்.


வவுனியா நெளுக்குளத்தில் கட்டாக்காலி மாடுகளினால் தினசரி விபத்துக்கள்:தூங்குகிறதா பிரதேச சபை வவுனியா நெளுக்குளம் மற்றும் அதனைச் சூழவுள்ள முக்கிய வீதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டத்தினால் விபத்துக்கள் பாரியளவில் அதிகரித்துள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.நெளுக்குளம், குழுமாட்டுசந்தி, இராசேந்திரகுளம், பூவரசங்குளம் மற்றும் மரக்காரம்பளை வீதி ஆகிய பகுதிகளில் இந்த அபாயகரமான சூழ்நிலை தொடர்கின்ற போதிலும், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை இது குறித்து எவ்விதமான உறுதியான நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.பகலில் மட்டுமன்றி, இரவு நேரங்களில் இந்த மாடுகள் பிரதான வீதிகளின் நடுவே கூட்டமாகப் படுத்துறங்குவதால், அவ்வீதிகளினூடாகப் பயணிக்கும் வாகன ஓட்டிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.போதிய வீதி மின்விளக்குகள் இல்லாத பகுதிகளில், கருமை நிறமுடைய மாடுகள் வீதியில் நிற்பது தூரத்திலிருந்து வருவதற்குக் தெரிவதில்லை. இதனால் தினசரி விபத்துக்கள் இடம்பெறுவது வாடிக்கையாகிவிட்டது.கடந்த இரு தினங்களுக்கு முன்னர்கூட, மரக்காரம்பளை வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் நின்ற கட்டாக்காலி மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் கடுமையான காயங்களுக்குள்ளாகியுள்ளார்.இலங்கையின் சட்ட நெறிமுறைகளின்படி, பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில் கால்நடைகளை வீதிகளில் அலைந்து திரியவிடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளூர் அதிகார சபைகளுக்கு (பிரதேச சபைகள் மற்றும் நகர சபைகள்) முழுமையான அதிகாரம் உண்டு.வீதிகளில் திரியும் மாடுகளைக் கைப்பற்றி, பட்டிக்குள் அடைத்து, அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் அதிகாரம் உள்ளூர் சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. பொது வீதிகளில் கால்நடைகளை அலைந்து திரிய விடுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.பொதுமக்களினால் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கு பலமுறை முறைப்பாடுகள் வழங்கப்பட்டும், இதுவரை மாடுகளின் உரிமையாளர்களுக்கு எதிராகவோ அல்லது மாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.கட்டாக்காலி மாடுகளின் உரிமையாளர்கள் தங்களது கால்நடைகளை முறையாகப் பராமரிக்காமல் வீதிகளில் விடுவதே இவ்விபத்துகளுக்கு முதன்மைக் காரணமாகும்.எனவே, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை மற்றும் பொலிஸார் உடனடியாக இவ்விடயத்தில் தலையிட்டு, வீதிகளில் திரியும் மாடுகளைக் கைப்பற்றி உரிமையாளர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க வேண்டும் இனிமேலும் தாமதிக்காது, பெறுமதியான மனித உயிர்கள் பலியாவதற்கு முன்னர் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த வவுனியா மக்களின் எதிர்பார்ப்பாகும்.

Advertisement

Advertisement

Advertisement