பிரித்தானியாவைத் தாக்கி வரும் 'சாண்ட்ரா' புயல் காரணமாக பல பகுதிகளில் கடும் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனால் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதுடன், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது.
சமர்செட் பகுதியில் மிக மோசமான வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அங்கு 'பாரிய பேரழிவுச் சம்பவம்' என அறிவிக்கப்பட்டு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.இங்கிலாந்து முழுவதும் 95-க்கும் மேற்பட்ட இடங்களில் வெள்ளப் பெருக்கு எச்சரிக்கையும், 250-க்கும் மேற்பட்ட இடங்களில் அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக டெவன் பகுதியில் 'ஆட்டர்' ஆறு வரலாற்றில் இல்லாத அளவு மிக உயர்ந்த மட்டத்தை எட்டியுள்ளது.
வடக்கு அயர்லாந்தில் 10,000-க்கும் மேற்பட்ட வீடுகள் மின்சாரமின்றி இருளில் மூழ்கியுள்ளன. சுமார் 300-க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
பெல்பாஸ்ட், லண்டன், மான்செஸ்டர் உள்ளிட்ட நகரங்களில் இருந்து புறப்பட வேண்டிய நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. அயர்லாந்து கடற்பரப்பில் பலத்த காற்று வீசுவதால் படகு சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
பலத்த காற்றினால் மரங்கள் முறிந்து விழுந்ததாலும், தண்டவாளங்களில் வெள்ளம் சூழ்ந்ததாலும் ரயில் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கிய மக்கள் 25-க்கும் மேற்பட்ட வாகனங்களில் இருந்துமீட்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட அபாயத்தால் மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவை உலுக்கும் சாண்ட்ரா சூறாவளி; வெள்ளப் பெருக்கு அபாயம் - அவசர நிலை பிரகடனம் பிரித்தானியாவைத் தாக்கி வரும் 'சாண்ட்ரா' புயல் காரணமாக பல பகுதிகளில் கடும் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதுடன், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது.சமர்செட் பகுதியில் மிக மோசமான வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அங்கு 'பாரிய பேரழிவுச் சம்பவம்' என அறிவிக்கப்பட்டு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.இங்கிலாந்து முழுவதும் 95-க்கும் மேற்பட்ட இடங்களில் வெள்ளப் பெருக்கு எச்சரிக்கையும், 250-க்கும் மேற்பட்ட இடங்களில் அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக டெவன் பகுதியில் 'ஆட்டர்' ஆறு வரலாற்றில் இல்லாத அளவு மிக உயர்ந்த மட்டத்தை எட்டியுள்ளது.வடக்கு அயர்லாந்தில் 10,000-க்கும் மேற்பட்ட வீடுகள் மின்சாரமின்றி இருளில் மூழ்கியுள்ளன. சுமார் 300-க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.பெல்பாஸ்ட், லண்டன், மான்செஸ்டர் உள்ளிட்ட நகரங்களில் இருந்து புறப்பட வேண்டிய நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. அயர்லாந்து கடற்பரப்பில் பலத்த காற்று வீசுவதால் படகு சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.பலத்த காற்றினால் மரங்கள் முறிந்து விழுந்ததாலும், தண்டவாளங்களில் வெள்ளம் சூழ்ந்ததாலும் ரயில் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கிய மக்கள் 25-க்கும் மேற்பட்ட வாகனங்களில் இருந்துமீட்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட அபாயத்தால் மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.