• Apr 18 2026

கம்பஹா தோட்ட தொழிற்சாலையை மீண்டும் திறக்குமாறு இ.தொ.கா கோரிக்கை!

Ziya / Apr 1st 2026, 4:30 pm
image

இ தொ கா வின் பொதுச் செயாலாளர் ஜீவன் தொண்டமான்  பரிந்துரைக்கு அமைய இதொகா நுவரெலியா மாநில இயக்குனர்.எஸ் கோவிந்தராஜ் இது தொடர்பாக தோட்டநிர்வாகி மற்றும் கேகாலை பிளான்டேசன் லிமிடெட் பிரதி பொது முகாமையாளர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடாத்தி உள்ளார்.

இக் கலந்துரையாடலில் இத் தோட்ட தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதால் இத்தொழிற்சாலையில் வேலை செய்த சுமார் 40.தொழிலாளர் மலையில்வழமையான வேலைக்கு அமர்த்தப் பட்டுள்ளனர் இதனால் தொழிலிற்சாலையில் வேலை செய்யும் போது ஈட்டிய வருமானத்தை இழந்துள்ளனர்.

அத்துடன் இத் தொழிற்சாலையில் தேவையான நவீன இயந்திரங்கள் பொருத்தப்பட்டு இதற்க்கு பல மில்லியன் ரூபா கம்பனியால் செலவிடப்பட்டு இப்போது மூடப்பட்டுள்ளது .

பூவீகமாக ஒருகேந்திர நிலையமாக உள்ள இதனை மூடுவது பல்வேறு வகையில் இத்தோட்ட தொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் இவ்வாறு மூடுவதை தொழிற்சங்க ரீதியில் வன்மையாக கண்டனத்தை பதிவு செயவதாகவும் இதை மீண்டும் திறக்குமாறு  கோரிக்கையினை கோவிந்தராஜ் விடுத்துள்ளார்.

இவருடைய கோரிக்கை யை ஏற்று நிர்வாகமும் கேகாலை பிளான்டேசன் லிமிடெட் பொது முகாமை யாளர் ஆகியோர் தற்போதுள்ள வறட்ச்சியால் கொழுந்து மற்றும் தேயிலை தூள் விலை வீழ்ச்சியின் காரணமேஇத் தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டது விரைவில் மீண்டும் திறக்கப்படும் என்ற உத்தரவாதம் கடித மூலம் கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.


கம்பஹா தோட்ட தொழிற்சாலையை மீண்டும் திறக்குமாறு இ.தொ.கா கோரிக்கை இ தொ கா வின் பொதுச் செயாலாளர் ஜீவன் தொண்டமான்  பரிந்துரைக்கு அமைய இதொகா நுவரெலியா மாநில இயக்குனர்.எஸ் கோவிந்தராஜ் இது தொடர்பாக தோட்டநிர்வாகி மற்றும் கேகாலை பிளான்டேசன் லிமிடெட் பிரதி பொது முகாமையாளர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடாத்தி உள்ளார்.இக் கலந்துரையாடலில் இத் தோட்ட தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதால் இத்தொழிற்சாலையில் வேலை செய்த சுமார் 40.தொழிலாளர் மலையில்வழமையான வேலைக்கு அமர்த்தப் பட்டுள்ளனர் இதனால் தொழிலிற்சாலையில் வேலை செய்யும் போது ஈட்டிய வருமானத்தை இழந்துள்ளனர்.அத்துடன் இத் தொழிற்சாலையில் தேவையான நவீன இயந்திரங்கள் பொருத்தப்பட்டு இதற்க்கு பல மில்லியன் ரூபா கம்பனியால் செலவிடப்பட்டு இப்போது மூடப்பட்டுள்ளது .பூவீகமாக ஒருகேந்திர நிலையமாக உள்ள இதனை மூடுவது பல்வேறு வகையில் இத்தோட்ட தொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் இவ்வாறு மூடுவதை தொழிற்சங்க ரீதியில் வன்மையாக கண்டனத்தை பதிவு செயவதாகவும் இதை மீண்டும் திறக்குமாறு  கோரிக்கையினை கோவிந்தராஜ் விடுத்துள்ளார்.இவருடைய கோரிக்கை யை ஏற்று நிர்வாகமும் கேகாலை பிளான்டேசன் லிமிடெட் பொது முகாமை யாளர் ஆகியோர் தற்போதுள்ள வறட்ச்சியால் கொழுந்து மற்றும் தேயிலை தூள் விலை வீழ்ச்சியின் காரணமேஇத் தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டது விரைவில் மீண்டும் திறக்கப்படும் என்ற உத்தரவாதம் கடித மூலம் கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement