அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுடன் இரண்டு வார கால போர்நிறுத்தத்தை அறிவித்ததைத் தொடர்ந்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி, WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 95.47 அமெரிக்க டொலராகக் குறைந்துள்ளது.
இது 17.48 டொலர் வீழ்ச்சியாகப் பதிவாகியுள்ளதுடன், சதவீத அடிப்படையில் 15.48 சதவீத சரிவாகும்.
அதேபோல், ப்ரெண்ட் வகை கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 92.84 டொலராகக் குறைந்துள்ளது. இதற்கிடையில், மர்பன் வகை கச்சா எண்ணெய் விலையும் 106.51 டொலராகக் குறைந்துள்ளது. இது முந்தைய விலையுடன் ஒப்பிடுகையில் 18.85 சதவீத வீழ்ச்சி என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இது இப்படி இருக்க உலக சந்தையில் இன்று தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுடன் இரண்டு வார கால போர்நிறுத்தத்தை அறிவித்ததைத் தொடர்ந்து இந்த நிலைமை பதிவாகியுள்ளது.
அதன்படி, தங்கத்தின் விலை 2.3 சதவீதத்தால் அதிகரித்து, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,811.66 அமெரிக்க டொலர்கள் எனும் சாதனை அளவை எட்டியுள்ளதாக சந்தை தரவுகள் காட்டுகின்றன.
இதேவேளை, வெள்ளியின் விலை 4.3 சதவீதத்தால் அதிகரித்து 76.08 டொலராக உயர்ந்துள்ளதுடன், பிளாட்டினம் மற்றும் பெலேடியம் ஆகியவற்றின் விலைகளும் சிறிதளவு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உலக சந்தையில் சரிந்த கச்சா எண்ணெய் விலை - தங்கத்தின் விலை வரலாறு காணாத உயர்வு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுடன் இரண்டு வார கால போர்நிறுத்தத்தை அறிவித்ததைத் தொடர்ந்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று காலை நிலவரப்படி, WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 95.47 அமெரிக்க டொலராகக் குறைந்துள்ளது. இது 17.48 டொலர் வீழ்ச்சியாகப் பதிவாகியுள்ளதுடன், சதவீத அடிப்படையில் 15.48 சதவீத சரிவாகும்.அதேபோல், ப்ரெண்ட் வகை கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 92.84 டொலராகக் குறைந்துள்ளது. இதற்கிடையில், மர்பன் வகை கச்சா எண்ணெய் விலையும் 106.51 டொலராகக் குறைந்துள்ளது. இது முந்தைய விலையுடன் ஒப்பிடுகையில் 18.85 சதவீத வீழ்ச்சி என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.இது இப்படி இருக்க உலக சந்தையில் இன்று தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுடன் இரண்டு வார கால போர்நிறுத்தத்தை அறிவித்ததைத் தொடர்ந்து இந்த நிலைமை பதிவாகியுள்ளது. அதன்படி, தங்கத்தின் விலை 2.3 சதவீதத்தால் அதிகரித்து, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,811.66 அமெரிக்க டொலர்கள் எனும் சாதனை அளவை எட்டியுள்ளதாக சந்தை தரவுகள் காட்டுகின்றன. இதேவேளை, வெள்ளியின் விலை 4.3 சதவீதத்தால் அதிகரித்து 76.08 டொலராக உயர்ந்துள்ளதுடன், பிளாட்டினம் மற்றும் பெலேடியம் ஆகியவற்றின் விலைகளும் சிறிதளவு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.