மன்னாரில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்துக்கு எதிராகவும், மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் இன்றைய தினம் திங்கட்கிழமை (29) மன்னாரில் பொது முடக்கல் போராட்டம் இடம்பெற்றது.
இதில் கலந்துகொள்வதற்காக, மன்னார் மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை தந்து, தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
மன்னார் மாவட்டம் முழுவதும் இன்றைய தினம் பொது முடக்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
மன்னார் பிரஜைகள் குழு மற்றும் போராட்டக்குழு இணைந்து இந்த அழைப்பினை விடுத்திருந்தன.
அதற்கமைய, இன்றைய தினம் காலை முதல் மன்னார் பஜார் பகுதி உள்ளடங்கலாக அனைத்து பகுதிகளிலும் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.
தனியார் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. பல்வேறு கிராமங்களில் உள்ள மீனவர்கள் கடற்தொழிலுக்கு செல்லவில்லை. இன்று காலை 10.30 மணியளவில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடியிருந்தனர்.
காற்றாலை திட்டம் மற்றும் பொலிஸாரின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாவட்ட பொது விளையாட்டு மைதானத்தில் இருந்து கண்டனப் பேரணி ஆரம்பமானது.
மன்னாரில் மக்களின் எதிர்ப்பை மீறி காற்றாலை கோபுரங்களை அமைத்தல், மன்னாரில் கனிம மணல் அகழ்வு மற்றும் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பொலிஸாரினால் அருட்தந்தையர்கள் உட்பட பொதுமக்கள் தாக்கப்பட்டமை ஆகிய சம்பவங்களை கண்டித்து இந்தப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தைக் கலைக்க பொலிஸார் குவிந்து அராஜகம் புரிந்தனர். எனினும் பொலிஸாரின் அராஜகத்தை எதிர்த்து மக்கள் அணி திரண்டு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
மன்னாரில் காற்றாலை அமைத்தல்; பொலிஸாரின் அராஜகத்தை எதிர்த்து திரண்ட மக்கள் மன்னாரில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்துக்கு எதிராகவும், மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் இன்றைய தினம் திங்கட்கிழமை (29) மன்னாரில் பொது முடக்கல் போராட்டம் இடம்பெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக, மன்னார் மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை தந்து, தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.மன்னார் மாவட்டம் முழுவதும் இன்றைய தினம் பொது முடக்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மன்னார் பிரஜைகள் குழு மற்றும் போராட்டக்குழு இணைந்து இந்த அழைப்பினை விடுத்திருந்தன.அதற்கமைய, இன்றைய தினம் காலை முதல் மன்னார் பஜார் பகுதி உள்ளடங்கலாக அனைத்து பகுதிகளிலும் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.தனியார் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. பல்வேறு கிராமங்களில் உள்ள மீனவர்கள் கடற்தொழிலுக்கு செல்லவில்லை. இன்று காலை 10.30 மணியளவில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடியிருந்தனர்.காற்றாலை திட்டம் மற்றும் பொலிஸாரின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாவட்ட பொது விளையாட்டு மைதானத்தில் இருந்து கண்டனப் பேரணி ஆரம்பமானது.மன்னாரில் மக்களின் எதிர்ப்பை மீறி காற்றாலை கோபுரங்களை அமைத்தல், மன்னாரில் கனிம மணல் அகழ்வு மற்றும் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பொலிஸாரினால் அருட்தந்தையர்கள் உட்பட பொதுமக்கள் தாக்கப்பட்டமை ஆகிய சம்பவங்களை கண்டித்து இந்தப் பேரணி முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தைக் கலைக்க பொலிஸார் குவிந்து அராஜகம் புரிந்தனர். எனினும் பொலிஸாரின் அராஜகத்தை எதிர்த்து மக்கள் அணி திரண்டு போராட்டத்தை முன்னெடுத்தனர்.