• May 23 2026

'பத்மே'வுடனான தொடர்பு; 3 மணிநேரம் பியூமியை துருவிய சி.ஐ.டி

Chithra / Oct 22nd 2025, 7:27 pm
image

பிரபல நடிகையான பியூமி ஹன்சமாலியிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று சுமார்  03 மணிநேரம்   வாக்குமூலம் பதிவு செய்துள்ளது. 

கெஹெல்பத்தர பத்மேவின் கைப்பேசியில் இருந்த புகைப்படம் ஒன்று தொடர்பிலேயே அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

பியூமி ஹன்சமாலி மற்றும் நாட்டின் பல பிரபல நடிகைகளுடன் கெஹெல்பத்தர பத்மேவும் புகைப்படத்தில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

பத்மே மற்றும் பியூமி ஹன்சமாலிக்கு இடையேயான பல தொலைபேசி உரையாடல்களும் அவரது கைப்பேசியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

குறித்த படங்களில் இருக்கும் நடிகைகளிடமும் எதிர்காலத்தில் வாக்குமூலம் பெறப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தோனேசியாவில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் இந்தோனேசியா பொலிஸாரால் 7 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது “கெஹெல்பத்தர பத்மே”, “கொமாண்டோ சலிந்த” மற்றும் “பாணந்துறை நிலங்க” உள்ளிட்ட 6 பேர் அடங்கிய பாதாள உலக கும்பல் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட  பாதாள உலக கும்பலில் இருந்த “பக்கோ சமனின்” மனைவி ஆகஸ்ட் 29 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டதையடுத்து தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

இதனையடுத்து “கெஹெல்பத்தார பத்மே” உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட பாதாள உலக கும்பல் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தப்பட்தையடுத்து அவர்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

'பத்மே'வுடனான தொடர்பு; 3 மணிநேரம் பியூமியை துருவிய சி.ஐ.டி பிரபல நடிகையான பியூமி ஹன்சமாலியிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று சுமார்  03 மணிநேரம்   வாக்குமூலம் பதிவு செய்துள்ளது. கெஹெல்பத்தர பத்மேவின் கைப்பேசியில் இருந்த புகைப்படம் ஒன்று தொடர்பிலேயே அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பியூமி ஹன்சமாலி மற்றும் நாட்டின் பல பிரபல நடிகைகளுடன் கெஹெல்பத்தர பத்மேவும் புகைப்படத்தில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பத்மே மற்றும் பியூமி ஹன்சமாலிக்கு இடையேயான பல தொலைபேசி உரையாடல்களும் அவரது கைப்பேசியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. குறித்த படங்களில் இருக்கும் நடிகைகளிடமும் எதிர்காலத்தில் வாக்குமூலம் பெறப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்தோனேசியாவில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் இந்தோனேசியா பொலிஸாரால் 7 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது “கெஹெல்பத்தர பத்மே”, “கொமாண்டோ சலிந்த” மற்றும் “பாணந்துறை நிலங்க” உள்ளிட்ட 6 பேர் அடங்கிய பாதாள உலக கும்பல் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டது.இவ்வாறு கைதுசெய்யப்பட்ட  பாதாள உலக கும்பலில் இருந்த “பக்கோ சமனின்” மனைவி ஆகஸ்ட் 29 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டதையடுத்து தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து “கெஹெல்பத்தார பத்மே” உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட பாதாள உலக கும்பல் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தப்பட்தையடுத்து அவர்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement