• Apr 24 2026

நெடுந்தீவை இந்தியாவோடு இணை; பயணிகள் பயணத்தை நிறுத்தாதே - மக்கள் பாரிய கவனயீர்ப்பு!

shanu / Apr 24th 2026, 11:07 am
image

நெடுந்தீவு மக்களின் அடிப்படைத் தேவைகளை வலியுறுத்திய  'கவனயீர்ப்பு போராட்டம் இன்று காலை நெடுந்தீவில் ஆரம்பமாகியுள்ளது. 


நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் ஆரம்பமான போராட்டம் மக்கள் பேரணியாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. 

 

நெடுந்தீவில்  நீண்டகாலமாக தீர்க்கப்படாத பிரச்சினைகளில் சிக்கி, நாளாந்தம் மக்கள் அவதிப்படும் சூழல் உருவாகியுள்ளது. எமது பிரச்சினைகள் அரசாங்கம் கவனத்திற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 


குடிநீர் பிரச்சினை, கடல் போக்குவரத்து, ஆசிரியர் பற்றாக்குறை, புனரமைக்கப்படாத வீதிகள், வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகள் உள்ளிட்ட பல அடிப்படைத் தேவைகள் இன்றி மக்கள் நாளாந்தம் பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே போராட்டம் முன்னெக்கப்பட்டுள்ளது. 


போராட்டத்தில் நெடுந்தீவை இந்தியாவோடு இணைத்துவிடு, பயணிகள் பயணத்தை நிறுத்தாதே, நெடுந்தீவு தாகமாய் இருக்கிறது, வரிசை யுகம் எப்போது முடியும், கச்சதீவை வைத்துக்கொள், நெடுந்தீவை கொடுத்துவிடு, எப்போது தீரும் நெடுந்தீவின் அவலம் உள்ளிட்ட பதாகைகளை தாங்கியவாறு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். 


போராட்டத்தில் நெடுந்தீவில் உள்ள ஒட்டுமொத்த கிராம மக்களுமே கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். 


நெடுந்தீவை இந்தியாவோடு இணை; பயணிகள் பயணத்தை நிறுத்தாதே - மக்கள் பாரிய கவனயீர்ப்பு நெடுந்தீவு மக்களின் அடிப்படைத் தேவைகளை வலியுறுத்திய  'கவனயீர்ப்பு போராட்டம் இன்று காலை நெடுந்தீவில் ஆரம்பமாகியுள்ளது. நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் ஆரம்பமான போராட்டம் மக்கள் பேரணியாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.  நெடுந்தீவில்  நீண்டகாலமாக தீர்க்கப்படாத பிரச்சினைகளில் சிக்கி, நாளாந்தம் மக்கள் அவதிப்படும் சூழல் உருவாகியுள்ளது. எமது பிரச்சினைகள் அரசாங்கம் கவனத்திற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குடிநீர் பிரச்சினை, கடல் போக்குவரத்து, ஆசிரியர் பற்றாக்குறை, புனரமைக்கப்படாத வீதிகள், வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகள் உள்ளிட்ட பல அடிப்படைத் தேவைகள் இன்றி மக்கள் நாளாந்தம் பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே போராட்டம் முன்னெக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் நெடுந்தீவை இந்தியாவோடு இணைத்துவிடு, பயணிகள் பயணத்தை நிறுத்தாதே, நெடுந்தீவு தாகமாய் இருக்கிறது, வரிசை யுகம் எப்போது முடியும், கச்சதீவை வைத்துக்கொள், நெடுந்தீவை கொடுத்துவிடு, எப்போது தீரும் நெடுந்தீவின் அவலம் உள்ளிட்ட பதாகைகளை தாங்கியவாறு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். போராட்டத்தில் நெடுந்தீவில் உள்ள ஒட்டுமொத்த கிராம மக்களுமே கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement