ஈரானிய உயர் தலைவரின் மறைவையிட்டு, கொழும்பு - 07 இல் அமைந்துள்ள அந்நாட்டுத் தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வைக்கப்பட்டுள்ள அனுதாபப் புத்தகத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவினர் நேற்று புதன்கிழமை கையொப்பமிட்டனர்.
அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த ஈரானிய உயர் தலைவர் மற்றும் ஈரானிய மக்களின் மறைவுக்குத் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் குழுவினர், இலங்கைக்கான ஈரான் தூதுவர் கலாநிதி அலி ரசா டெல்கொஷ்ஷைச் சந்தித்துத் தமது அனுதாபங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது பிராந்திய அமைதி மற்றும் ஈரானுடனான இருதரப்பு உறவுகள் குறித்தும் சுருக்கமாகக் கலந்துரையாடப்பட்டது.
இதேவேளை அமெரிக்கா – இஸ்ரேல் ஆகியவற்றின் கூட்டு நடவடிக்கையின் மூலம் ஈரான் மீது மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்புத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயத்துல்லா அலி கொமெய்னியின் மறைவை முன்னிட்டு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தனது ஆழ்ந்த அனுதாபங்களை பதிவு செய்துள்ளார்.
இதனையடுத்து, இன்று (05) கொழும்பிலுள்ள ஈரான் தூதரகத்திற்கு விஜயம் மேற்கொண்ட அவர், அங்குள்ள தூதுவர். அலிடெர்ஷா டெல்கொஷ்வை சந்தித்து தனது அனுதாபத்தைத் பகிர்ந்துகொண்டதுடன், இரங்கல் பதிவேட்டிலும் தனது இரங்கல் செய்தியை பதிவு செய்தார்.
இந்த விஜயத்தின்போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தாஹீர் மரிக்கார் மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளரான அஷ்ரப் தாஹீர் ஆகியோரும் கலந்து கொண்டு தங்களது இரங்கலை பதிவு செய்தனர்.
இதேவேளை ஈரான் உயர் தலைவர் அயத்துல்லா அலி கொமெய்னியின் மறைவுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காகச் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர ஈரான் தூதரகத்திற்குச் சென்றுள்ளார்.
இது குறித்துத் தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் பதிவொன்றை இட்டுள்ளார்.
கொமெய்னி, இலங்கையர்களாகிய எமது நெருங்கிய நண்பர் எனவும், நாட்டின் முப்பது வருட கால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரப் பெரிதும் உதவியவர். அவர் வரலாறு முழுவதும் இலங்கைக்காகக் குரல்கொடுத்த ஒரு தலைவர்.
ஈரானிய உயர் தலைவர் அயதுல்லா அலி கொமெய்னியின் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர இரங்கல் வெளியிட்டுள்ளார்.
ஈரான் தூதரகத்தில் ஹக்கீம், ரிஷாட், திலித் இரங்கல் - உயிரிழந்த உயர் தலைவருக்கு அனுதாபம் ஈரானிய உயர் தலைவரின் மறைவையிட்டு, கொழும்பு - 07 இல் அமைந்துள்ள அந்நாட்டுத் தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வைக்கப்பட்டுள்ள அனுதாபப் புத்தகத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவினர் நேற்று புதன்கிழமை கையொப்பமிட்டனர்.அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த ஈரானிய உயர் தலைவர் மற்றும் ஈரானிய மக்களின் மறைவுக்குத் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் குழுவினர், இலங்கைக்கான ஈரான் தூதுவர் கலாநிதி அலி ரசா டெல்கொஷ்ஷைச் சந்தித்துத் தமது அனுதாபங்களைப் பகிர்ந்து கொண்டனர்.இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.இதன்போது பிராந்திய அமைதி மற்றும் ஈரானுடனான இருதரப்பு உறவுகள் குறித்தும் சுருக்கமாகக் கலந்துரையாடப்பட்டது.இதேவேளை அமெரிக்கா – இஸ்ரேல் ஆகியவற்றின் கூட்டு நடவடிக்கையின் மூலம் ஈரான் மீது மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்புத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயத்துல்லா அலி கொமெய்னியின் மறைவை முன்னிட்டு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தனது ஆழ்ந்த அனுதாபங்களை பதிவு செய்துள்ளார்.இதனையடுத்து, இன்று (05) கொழும்பிலுள்ள ஈரான் தூதரகத்திற்கு விஜயம் மேற்கொண்ட அவர், அங்குள்ள தூதுவர். அலிடெர்ஷா டெல்கொஷ்வை சந்தித்து தனது அனுதாபத்தைத் பகிர்ந்துகொண்டதுடன், இரங்கல் பதிவேட்டிலும் தனது இரங்கல் செய்தியை பதிவு செய்தார்.இந்த விஜயத்தின்போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தாஹீர் மரிக்கார் மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளரான அஷ்ரப் தாஹீர் ஆகியோரும் கலந்து கொண்டு தங்களது இரங்கலை பதிவு செய்தனர்.இதேவேளை ஈரான் உயர் தலைவர் அயத்துல்லா அலி கொமெய்னியின் மறைவுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காகச் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர ஈரான் தூதரகத்திற்குச் சென்றுள்ளார். இது குறித்துத் தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் பதிவொன்றை இட்டுள்ளார்.கொமெய்னி, இலங்கையர்களாகிய எமது நெருங்கிய நண்பர் எனவும், நாட்டின் முப்பது வருட கால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரப் பெரிதும் உதவியவர். அவர் வரலாறு முழுவதும் இலங்கைக்காகக் குரல்கொடுத்த ஒரு தலைவர்.ஈரானிய உயர் தலைவர் அயதுல்லா அலி கொமெய்னியின் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர இரங்கல் வெளியிட்டுள்ளார்.