• May 29 2025

ஹோட்டல் ஒன்றில் குளிர்ப்பான போத்தல்களில் கசிப்பு விற்பனை!

Tamil nila / Jul 22nd 2024, 9:53 pm
image

ஹோட்டல் ஒன்றில் தேநீர் மற்றும் குளிர்பானம் விற்பனை செய்கின்ற போர்வையில், கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட ஹோட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர் ஒருவர் கைதாகியுள்ளனர்.

கண்டி மத்திய சந்தையில் உள்ள ஹோட்டலிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது 8 கசிப்பு போத்தல்களுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகம் ஏற்படாத வகையில் குளிர்ப்பான போத்தல்களில் கசிப்பு  பொதி செய்து வைத்துள்ளதாகவும் ஹோட்டல் கவுண்டரில் பணம் செலுத்திய பின்னர் , ஊழியர்களால் டீ கப்பில் கசிப்பு ஊற்றி கொடுப்பதாகவும் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

சில காலமாக இடம்பெற்று வரும் இந்த வியாபாரத்தில், சந்தையில் வேலை செய்யும் நாட்டாமிகள், கடைகளில் வேலை செய்யும் ஊழியர்கள் ஆகியோர் தினசரி வாடிக்கையாளர்கள் எனவும் கூறப்படுகின்றது.

அதிகாலை 5.00 மணி முதல் கசிப்பு வியாபாரம் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


ஹோட்டல் ஒன்றில் குளிர்ப்பான போத்தல்களில் கசிப்பு விற்பனை ஹோட்டல் ஒன்றில் தேநீர் மற்றும் குளிர்பானம் விற்பனை செய்கின்ற போர்வையில், கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட ஹோட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர் ஒருவர் கைதாகியுள்ளனர்.கண்டி மத்திய சந்தையில் உள்ள ஹோட்டலிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது 8 கசிப்பு போத்தல்களுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேகம் ஏற்படாத வகையில் குளிர்ப்பான போத்தல்களில் கசிப்பு  பொதி செய்து வைத்துள்ளதாகவும் ஹோட்டல் கவுண்டரில் பணம் செலுத்திய பின்னர் , ஊழியர்களால் டீ கப்பில் கசிப்பு ஊற்றி கொடுப்பதாகவும் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.சில காலமாக இடம்பெற்று வரும் இந்த வியாபாரத்தில், சந்தையில் வேலை செய்யும் நாட்டாமிகள், கடைகளில் வேலை செய்யும் ஊழியர்கள் ஆகியோர் தினசரி வாடிக்கையாளர்கள் எனவும் கூறப்படுகின்றது.அதிகாலை 5.00 மணி முதல் கசிப்பு வியாபாரம் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now