தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, துறைசார் அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வலியுறுத்தியுள்ளது.
அனுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே, அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்:-
"தரமற்ற நிலக்கரி இறக்குமதி விவகாரத்தில் பொறுப்புக்கூற வேண்டிய துறைசார் அமைச்சருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும். அத்தகைய பிரேரணை முன்வைக்கப்படும்போது, அதற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்பதே எமது கட்சியின் முடிவாக இருக்கும்.
தற்போதைய அரசிடம் நாடாளுமன்றத்தில் 159 ஆசனங்கள் இருப்பதால், இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்படலாம். ஆனால், நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்றாலும் மக்கள் மத்தியில் இந்த அரசு ஏற்கனவே நம்பிக்கையை இழந்துவிட்டது.
மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் மக்களின் இந்த அதிருப்தி தெளிவாகப் புலனாகும். எனவே, அரசு தேர்தலை ஒத்திவைக்காமல் உடனடியாக அதனை நடத்த முன்வர வேண்டும்." - என்றார்.
நிலக்கரி மோசடி: துறைசார் அமைச்சருக்கு எதிராக பிரேரணை கோருகின்றது 'மொட்டு' தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, துறைசார் அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வலியுறுத்தியுள்ளது.அனுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே, அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி இதனைத் தெரிவித்தார்.அவர் அங்கு மேலும் கூறுகையில்:-"தரமற்ற நிலக்கரி இறக்குமதி விவகாரத்தில் பொறுப்புக்கூற வேண்டிய துறைசார் அமைச்சருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும். அத்தகைய பிரேரணை முன்வைக்கப்படும்போது, அதற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்பதே எமது கட்சியின் முடிவாக இருக்கும்.தற்போதைய அரசிடம் நாடாளுமன்றத்தில் 159 ஆசனங்கள் இருப்பதால், இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்படலாம். ஆனால், நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்றாலும் மக்கள் மத்தியில் இந்த அரசு ஏற்கனவே நம்பிக்கையை இழந்துவிட்டது.மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் மக்களின் இந்த அதிருப்தி தெளிவாகப் புலனாகும். எனவே, அரசு தேர்தலை ஒத்திவைக்காமல் உடனடியாக அதனை நடத்த முன்வர வேண்டும்." - என்றார்.