களுத்துறை - வெலிப்பன்னை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற தகராறு ஒன்று கொலையில் முடிந்துள்ளது.
இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் திடீரென வன்முறையாக மாறிய நிலையில், 48 வயதுடைய நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் தர்கா நகரத்தைச் சேர்ந்த 48 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில், வாக்குவாதத்தின் போது சந்தேகநபர் கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் நடத்தியது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 56 வயதுடைய நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிப்பன்னை காவல்துறையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இரண்டு குழுக்களுக்கிடையேயான மோதல் – ஒருவர் வெட்டிக்கொலை களுத்துறை - வெலிப்பன்னை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற தகராறு ஒன்று கொலையில் முடிந்துள்ளது.இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் திடீரென வன்முறையாக மாறிய நிலையில், 48 வயதுடைய நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் தர்கா நகரத்தைச் சேர்ந்த 48 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில், வாக்குவாதத்தின் போது சந்தேகநபர் கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் நடத்தியது தெரியவந்துள்ளது.இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 56 வயதுடைய நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிப்பன்னை காவல்துறையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.