கடலில் வைத்து ஒரு மீனவரை பிடித்துக் கொண்டு போய் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில், தமிழ்நாட்டு மீனவர்கள் குறித்த இலங்கை மீனவரை கடற்கொள்ளையர் என சந்தேகத்தின் பேரில் பிடித்து அவரை அடித்து துன்பப்படுத்துகிற , காயப்படுத்துகிற விதமான புகைப்படங்கள், காணொளி சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளி வந்துள்ள நிலையில் குறித்த மனிதாபிமானமற்ற செயற்பாட்டிற்கு சிவில் சமூகம் சார்பாக வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிறாடோ தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் நண்டு வலைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (28) காலை மன்னார் மாவட்ட செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 25 மீனவர்களுக்கு குறித்த நண்டு வலைகள் வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
குறித்த மீனவர் கடற்கொள்ளையராக இருந்தால் அவரை பிடித்து சட்ட நடவடிக்கைக்கு உற்படுத்தி இருக்க முடியும்.
இரண்டு நாடுகளுக்குமான ராஜதந்திர முறை இருக்கிறது. அவர்களைப் பிடித்து சட்டத்தின் முன் ஒப்படைக்கப்பட வேண்டும். அது முறையாக விசாரணை செய்யப்பட்டு, இரண்டு நாடுகளும் ராஜதந்திர ரீதியாக கையாளப்பட வேண்டும்.
அதை விடுத்து சக மீனவர்களுக்கு இடையே நீங்கள் தண்டனை கொடுக்க அல்லது பிடித்து அவர்களை இரண்டு பேருக்கும் மாறி மாறி இலங்கையில் இருக்கின்ற மீனவர்களும் தமிழ்நாட்டில் இருக்கிற மீனவர்களுக்கும் இடையே நீங்கள் அந்த முரண்பாடுகளை உருவாக்கி விட்டீர்கள் என்றால் இது ஒரு பெரிய ஆபத்தான நிலையை உருவாக்கும்.
தடை செய்யப்பட்ட காலத்தில் இந்தியா மீனவர்கள் இழுவைப் படகுகள் தற்போது தடை செய்யப்பட்டிருக்கிறது . கடல் உற்பத்தி இனங்கள் பெருகும் காலம் என்ற படியினாலே வரமாட்டார்கள். ஆனால் நாட்டுப் படகுகள் இன்னும் வந்து கொண்டிருக்கின்றன. இழுவைப்படகுகள் வாரத்தில் மூன்று தடவைகளுக்கு மேல் 500 தொடக்கம் 1500 இழுவைப்படகுகள் எங்களுடைய வளத்தை கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இரு நாட்டு மீனவர்களுக்கு இடையில் மோதலை தூண்டிவிடும் செயல்பாடு-சிவில் அமைப்பு பிரதிநிதி கண்டனம் கடலில் வைத்து ஒரு மீனவரை பிடித்துக் கொண்டு போய் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில், தமிழ்நாட்டு மீனவர்கள் குறித்த இலங்கை மீனவரை கடற்கொள்ளையர் என சந்தேகத்தின் பேரில் பிடித்து அவரை அடித்து துன்பப்படுத்துகிற , காயப்படுத்துகிற விதமான புகைப்படங்கள், காணொளி சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளி வந்துள்ள நிலையில் குறித்த மனிதாபிமானமற்ற செயற்பாட்டிற்கு சிவில் சமூகம் சார்பாக வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிறாடோ தெரிவித்தார்.மன்னார் மாவட்டத்தில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் நண்டு வலைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (28) காலை மன்னார் மாவட்ட செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 25 மீனவர்களுக்கு குறித்த நண்டு வலைகள் வழங்கி வைக்கப்பட்டது. இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,குறித்த மீனவர் கடற்கொள்ளையராக இருந்தால் அவரை பிடித்து சட்ட நடவடிக்கைக்கு உற்படுத்தி இருக்க முடியும். இரண்டு நாடுகளுக்குமான ராஜதந்திர முறை இருக்கிறது. அவர்களைப் பிடித்து சட்டத்தின் முன் ஒப்படைக்கப்பட வேண்டும். அது முறையாக விசாரணை செய்யப்பட்டு, இரண்டு நாடுகளும் ராஜதந்திர ரீதியாக கையாளப்பட வேண்டும்.அதை விடுத்து சக மீனவர்களுக்கு இடையே நீங்கள் தண்டனை கொடுக்க அல்லது பிடித்து அவர்களை இரண்டு பேருக்கும் மாறி மாறி இலங்கையில் இருக்கின்ற மீனவர்களும் தமிழ்நாட்டில் இருக்கிற மீனவர்களுக்கும் இடையே நீங்கள் அந்த முரண்பாடுகளை உருவாக்கி விட்டீர்கள் என்றால் இது ஒரு பெரிய ஆபத்தான நிலையை உருவாக்கும்.தடை செய்யப்பட்ட காலத்தில் இந்தியா மீனவர்கள் இழுவைப் படகுகள் தற்போது தடை செய்யப்பட்டிருக்கிறது . கடல் உற்பத்தி இனங்கள் பெருகும் காலம் என்ற படியினாலே வரமாட்டார்கள். ஆனால் நாட்டுப் படகுகள் இன்னும் வந்து கொண்டிருக்கின்றன. இழுவைப்படகுகள் வாரத்தில் மூன்று தடவைகளுக்கு மேல் 500 தொடக்கம் 1500 இழுவைப்படகுகள் எங்களுடைய வளத்தை கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.