மட்டக்களப்பு - ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீராவோடை பகுதியில், நான்கு கால்களுடன் கோழிக் குஞ்சு ஒன்று பிறந்துள்ளமை மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மீராவோடை எல்லை வீதியைச் சேர்ந்த முகம்மட் நஸீர் என்பவர், கடந்த ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி 11 முட்டைகளைத் தனது வீட்டில் அடைகாக்க வைத்துள்ளார்.
இவ்வாறு அடைகாக்க வைக்கப்பட்ட முட்டைகளிலிருந்து நேற்று 9 கோழிக் குஞ்சுகள் பொரிந்துள்ளன.
அவ்வாறு பிறந்த குஞ்சுகளில் ஒன்று, நான்கு கால்களுடன் அபூர்வமாகக் காணப்படுவதைக் கண்டு உரிமையாளர் வியப்படைந்துள்ளார்.
கறுப்பு மற்றும் மஞ்சள் நிறங்கள் கலந்த நிலையில் காணப்படும் இந்தக் கோழிக் குஞ்சு, மற்றைய குஞ்சுகளைப் போலவே மிகவும் ஆரோக்கியமாகவுள்ளதாக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த அழகிய மற்றும் அபூர்வமான கோழிக் குஞ்சை அப்பகுதியைச் சேர்ந்த பலரும் மிகவும் ஆர்வத்துடன் வந்து பார்வையிட்டுச் செல்வதாக தெரியவருகின்றது.
பல கால்களுடன் பிறந்த கோழிக்குஞ்சு - மட்டக்களப்பில் அபூர்வம் மட்டக்களப்பு - ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீராவோடை பகுதியில், நான்கு கால்களுடன் கோழிக் குஞ்சு ஒன்று பிறந்துள்ளமை மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.மீராவோடை எல்லை வீதியைச் சேர்ந்த முகம்மட் நஸீர் என்பவர், கடந்த ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி 11 முட்டைகளைத் தனது வீட்டில் அடைகாக்க வைத்துள்ளார். இவ்வாறு அடைகாக்க வைக்கப்பட்ட முட்டைகளிலிருந்து நேற்று 9 கோழிக் குஞ்சுகள் பொரிந்துள்ளன.அவ்வாறு பிறந்த குஞ்சுகளில் ஒன்று, நான்கு கால்களுடன் அபூர்வமாகக் காணப்படுவதைக் கண்டு உரிமையாளர் வியப்படைந்துள்ளார். கறுப்பு மற்றும் மஞ்சள் நிறங்கள் கலந்த நிலையில் காணப்படும் இந்தக் கோழிக் குஞ்சு, மற்றைய குஞ்சுகளைப் போலவே மிகவும் ஆரோக்கியமாகவுள்ளதாக உரிமையாளர் தெரிவித்துள்ளார். தற்போது இந்த அழகிய மற்றும் அபூர்வமான கோழிக் குஞ்சை அப்பகுதியைச் சேர்ந்த பலரும் மிகவும் ஆர்வத்துடன் வந்து பார்வையிட்டுச் செல்வதாக தெரியவருகின்றது.