மித்தெனிய - தொரயாய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனப் பொருள், ஐஸ் போதைப்பொருள் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் இராசயனப்பொருள் என தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையினால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மித்தேனியவில் கண்டுபிடிக்கப்பட்ட கொள்கலன்களில் ஐஸ் போதைபொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் இருந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான அறிக்கையை, தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை பொலிஸாரிடம் கையளித்துள்ளது.
இதன்படியே இத் தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை நெத்தோல்பிட்டிய மற்றும் கந்தானை பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனப் பொருட்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதாகவும்,
தொடர்புடைய அறிக்கைகள் அடுத்த வாரம் மேல்மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை மேலும் தெரிவித்துள்ளது.
மித்தெனியவில் மீட்கப்பட்ட இரசாயனங்கள் ஐஸ் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுவது உறுதி; அறிக்கை பொலிஸாரிடம் கையளிப்பு மித்தெனிய - தொரயாய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனப் பொருள், ஐஸ் போதைப்பொருள் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் இராசயனப்பொருள் என தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையினால் உறுதி செய்யப்பட்டுள்ளது.மித்தேனியவில் கண்டுபிடிக்கப்பட்ட கொள்கலன்களில் ஐஸ் போதைபொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் இருந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான அறிக்கையை, தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை பொலிஸாரிடம் கையளித்துள்ளது. இதன்படியே இத் தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை நெத்தோல்பிட்டிய மற்றும் கந்தானை பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனப் பொருட்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதாகவும், தொடர்புடைய அறிக்கைகள் அடுத்த வாரம் மேல்மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை மேலும் தெரிவித்துள்ளது.