• Apr 27 2026

சாவகச்சேரி- புலோலி வீதி புனரமைப்பு ஆரம்பம்!

Ziya / Feb 24th 2026, 1:48 pm
image

சாவகச்சேரி - புலோலி வீதிப் புனரமைப்புக்கான ஆரம்ப நாள் நிகழ்வு யாழ்.சரசாலையில் இன்று(24) இடம்பெற்றுள்ளது.

அதற்கமைய, யாழ்ப்பாணம் தென்மராட்சிப் பிரதேசத்தில் அமைந்துள்ள சாவகச்சேரி - புலோலி பிரதான வீதியின் 3.9 கிலோ மீற்றர் பகுதி "காப்பெற்" வீதியாக புனரமைக்கப்படவுள்ளது.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சால், இதற்காக 232 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த வீதி புனரமைப்பு ஆரம்பநாள் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன், தேசிய மக்கள் சக்தியின் தென்மராட்சி இணைப்பாளர் காராளசிங்கம் பிரகாஷ், பிரதேச சபை உறுப்பினர்கள்,  வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்

சாவகச்சேரி- புலோலி வீதி புனரமைப்பு ஆரம்பம் சாவகச்சேரி - புலோலி வீதிப் புனரமைப்புக்கான ஆரம்ப நாள் நிகழ்வு யாழ்.சரசாலையில் இன்று(24) இடம்பெற்றுள்ளது.அதற்கமைய, யாழ்ப்பாணம் தென்மராட்சிப் பிரதேசத்தில் அமைந்துள்ள சாவகச்சேரி - புலோலி பிரதான வீதியின் 3.9 கிலோ மீற்றர் பகுதி "காப்பெற்" வீதியாக புனரமைக்கப்படவுள்ளது.போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சால், இதற்காக 232 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த வீதி புனரமைப்பு ஆரம்பநாள் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன், தேசிய மக்கள் சக்தியின் தென்மராட்சி இணைப்பாளர் காராளசிங்கம் பிரகாஷ், பிரதேச சபை உறுப்பினர்கள்,  வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்

Advertisement

Advertisement

Advertisement