• Aug 18 2025

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பு; விமானங்களை தவறவிட்ட பயணிகள்

Chithra / Aug 17th 2025, 4:25 pm
image

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வெளியேறும் முனையத்தில் ஏற்பட்ட நெரிசலால் பலர் தமது விமானங்களைத் தவறவிட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது

இதற்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாதிக்கப்பட்ட பயணிகள் துறைசார் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 

விமான நிலையத்தின் வெளியேறும் முனையத்தில் நேற்றிரவு கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

பயணிகளின் தரவுகளைப் பரிசோதிக்கும் கருமபீடம் மற்றும் குடிவரவு, குடியகல்வு கரும பீடங்களில் நேற்றிரவு ஏற்பட்ட நீண்டவரிசை காரணமாக நெரிசல் ஏற்பட்டதாக, பயணிகள் தமது சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டுள்ளனர். 

இதன்காரணமாக பயணிகள் சிலர் தமது பயணங்களைத் தவறவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். 

ஒரே நேரத்தில் பல விமானங்களை இயக்குவதற்குத் திட்டமிட்டதால் இந்த அசௌகரியம் ஏற்பட்டாக பயணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

முறையான திட்டமிடல் இன்மையால் இந்த குழப்ப நிலை ஏற்பட்டதாக பயணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.


கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பு; விமானங்களை தவறவிட்ட பயணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வெளியேறும் முனையத்தில் ஏற்பட்ட நெரிசலால் பலர் தமது விமானங்களைத் தவறவிட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளதுஇதற்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாதிக்கப்பட்ட பயணிகள் துறைசார் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். விமான நிலையத்தின் வெளியேறும் முனையத்தில் நேற்றிரவு கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. பயணிகளின் தரவுகளைப் பரிசோதிக்கும் கருமபீடம் மற்றும் குடிவரவு, குடியகல்வு கரும பீடங்களில் நேற்றிரவு ஏற்பட்ட நீண்டவரிசை காரணமாக நெரிசல் ஏற்பட்டதாக, பயணிகள் தமது சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டுள்ளனர். இதன்காரணமாக பயணிகள் சிலர் தமது பயணங்களைத் தவறவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். ஒரே நேரத்தில் பல விமானங்களை இயக்குவதற்குத் திட்டமிட்டதால் இந்த அசௌகரியம் ஏற்பட்டாக பயணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.முறையான திட்டமிடல் இன்மையால் இந்த குழப்ப நிலை ஏற்பட்டதாக பயணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement