• May 06 2026

2027 முதல் பரீட்சைகள் மற்றும் விடுமுறைகளில் மாற்றமா?

Chithra / May 5th 2026, 12:11 pm
image

 

இலங்கையின் பாடசாலைத் தவணைகள் மற்றும் பொதுப் பரீட்சை கால அட்டவணையை, 2020 ஆம் ஆண்டிற்கு முந்தைய நிலைக்கு அடுத்த ஆண்டு (2027) முதல் முழுமையாகக் கொண்டுவர கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் நலக கலுவேவ முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் இலங்கையின் கல்வி முறைமை தொடர்ச்சியான தடைகளை எதிர்கொண்டு வந்தது. கொவிட் 19 பெருந்தொற்று, நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் சீரற்ற வானிலை போன்ற காரணங்களால் பாடசாலை நாட்காட்டி பாரியளவில் மாற்றமடைந்தது.

இந்தச் சீர்குலைவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 2027 ஆம் ஆண்டு முதல் பாடசாலைத் தவணைகள் மற்றும் பொதுப் பரீட்சைகள் அனைத்தும் அவற்றின் வழக்கமான கால அட்டவணையின்படி நடைபெறும் என்று செயலாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

பழைய அட்டவணைக்கு மாறுவதற்கான ஒரு நிலைமாற்றக் காலமாக நடப்பு 2026 ஆம் ஆண்டில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

2027 ஆம் ஆண்டு ஜனவரியில் புதிய கல்வியாண்டைத் தொடங்குவதற்கு ஏதுவாக, இந்த ஆண்டு (2026) எஞ்சியுள்ள இரண்டு பாடசாலை விடுமுறை காலங்களும் வழக்கத்தை விட நீண்ட நாட்களுக்கு வழங்கப்படும்.

2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் எவ்வித மாற்றமும் இன்றி திட்டமிட்டபடி டிசம்பர் மாதம் நடைபெறும்.

பாடசாலைத் தவணைகள் மாற்றமடைந்ததால், பொதுப் பரீட்சைகள் பலமுறை ஒத்திவைக்கப்பட்டு மாணவர்களின் உயர்கல்வித் திட்டமிடல் பாதிக்கப்பட்டது.

சமீபத்தில் ஏற்பட்ட டிட்வா சூறாவளி உள்ளிட்ட மோசமான வானிலை பாதிப்புகளும் நாட்டின் பல பகுதிகளில் கல்வி நடவடிக்கைகளைத் தற்காலிகமாக முடக்கின.இந்தச் சவால்களைக் கடந்து, கல்வி முறையைச் சீரமைப்பதன் மூலம் மாணவர்களின் கல்வி எதிர்காலத்தை மீண்டும் ஒரு நிலையான பாதைக்குக் கொண்டு வர முடியும் என கல்வி அமைச்சு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

2027 முதல் பரீட்சைகள் மற்றும் விடுமுறைகளில் மாற்றமா  இலங்கையின் பாடசாலைத் தவணைகள் மற்றும் பொதுப் பரீட்சை கால அட்டவணையை, 2020 ஆம் ஆண்டிற்கு முந்தைய நிலைக்கு அடுத்த ஆண்டு (2027) முதல் முழுமையாகக் கொண்டுவர கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.இது தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் நலக கலுவேவ முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் இலங்கையின் கல்வி முறைமை தொடர்ச்சியான தடைகளை எதிர்கொண்டு வந்தது. கொவிட் 19 பெருந்தொற்று, நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் சீரற்ற வானிலை போன்ற காரணங்களால் பாடசாலை நாட்காட்டி பாரியளவில் மாற்றமடைந்தது.இந்தச் சீர்குலைவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 2027 ஆம் ஆண்டு முதல் பாடசாலைத் தவணைகள் மற்றும் பொதுப் பரீட்சைகள் அனைத்தும் அவற்றின் வழக்கமான கால அட்டவணையின்படி நடைபெறும் என்று செயலாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.பழைய அட்டவணைக்கு மாறுவதற்கான ஒரு நிலைமாற்றக் காலமாக நடப்பு 2026 ஆம் ஆண்டில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.2027 ஆம் ஆண்டு ஜனவரியில் புதிய கல்வியாண்டைத் தொடங்குவதற்கு ஏதுவாக, இந்த ஆண்டு (2026) எஞ்சியுள்ள இரண்டு பாடசாலை விடுமுறை காலங்களும் வழக்கத்தை விட நீண்ட நாட்களுக்கு வழங்கப்படும்.2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் எவ்வித மாற்றமும் இன்றி திட்டமிட்டபடி டிசம்பர் மாதம் நடைபெறும்.பாடசாலைத் தவணைகள் மாற்றமடைந்ததால், பொதுப் பரீட்சைகள் பலமுறை ஒத்திவைக்கப்பட்டு மாணவர்களின் உயர்கல்வித் திட்டமிடல் பாதிக்கப்பட்டது.சமீபத்தில் ஏற்பட்ட டிட்வா சூறாவளி உள்ளிட்ட மோசமான வானிலை பாதிப்புகளும் நாட்டின் பல பகுதிகளில் கல்வி நடவடிக்கைகளைத் தற்காலிகமாக முடக்கின.இந்தச் சவால்களைக் கடந்து, கல்வி முறையைச் சீரமைப்பதன் மூலம் மாணவர்களின் கல்வி எதிர்காலத்தை மீண்டும் ஒரு நிலையான பாதைக்குக் கொண்டு வர முடியும் என கல்வி அமைச்சு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement