• Apr 30 2025

மத்திய வங்கி பத்திர மோசடி: ரணில் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் புதிய விசாரணை..!

Sharmi / Mar 8th 2025, 9:51 pm
image

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அரசாங்கம் புதிய விசாரணையைத் தொடங்கும் என பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் அல் ஜசீராவுக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிடப்பட்ட,  படலந்தா அறிக்கை தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்.

அதேவேளை, மத்திய வங்கி பத்திர மோசடி மற்றும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்தும் விசாரணைகள் நடத்தப்படும்  என்றும் தெரிவித்தார்.

அத்துடன் இவை இரண்டும் ரணில் விக்கிரமசிங்க  பிரதமராக இருந்த  காலத்திலேயே இடம்பெற்றுள்ளது.

அதேவேளை, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வெளிப்படைத்தன்மைக்கு உறுதி பூண்டுள்ளதாகவும், ரணில் விக்கிரமசிங்க முன்னர் அரசியல் பாதுகாப்பைப் பெற்ற அனைத்து குற்றச்சாட்டுகள் மீதும் நடவடிக்கை எடுக்கும் என்றும் வட்டகல வலியுறுத்தினார்.

மத்திய வங்கி பத்திர மோசடி: ரணில் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் புதிய விசாரணை. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அரசாங்கம் புதிய விசாரணையைத் தொடங்கும் என பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் அல் ஜசீராவுக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிடப்பட்ட,  படலந்தா அறிக்கை தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்.அதேவேளை, மத்திய வங்கி பத்திர மோசடி மற்றும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்தும் விசாரணைகள் நடத்தப்படும்  என்றும் தெரிவித்தார்.அத்துடன் இவை இரண்டும் ரணில் விக்கிரமசிங்க  பிரதமராக இருந்த  காலத்திலேயே இடம்பெற்றுள்ளது.அதேவேளை, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வெளிப்படைத்தன்மைக்கு உறுதி பூண்டுள்ளதாகவும், ரணில் விக்கிரமசிங்க முன்னர் அரசியல் பாதுகாப்பைப் பெற்ற அனைத்து குற்றச்சாட்டுகள் மீதும் நடவடிக்கை எடுக்கும் என்றும் வட்டகல வலியுறுத்தினார்.

Advertisement

Advertisement

Advertisement