சட்ட மன்ற தேர்தலில் தமிழ் நாடு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் முதலமைச்சராக வெற்றிவாகை சூடியதையடுத்து கிண்ணியாவில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
இதனை நாச்சிக்குடா இளைஞனும் முன்னால் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற வேட்பாளருமான இம்ரான் தலைமையிலான இளைஞர் அணி இரவு (04) கொண்டாட்டத்தில் ஈடுபண்டார்கள்.
தமிழ் நாடு முதலமைச்சர் விஜயை மனமார வாழ்த்துவதோடு வாழ்த்துக்கள் அடங்கிய பதாகைகளையும் ஏந்தி கொண்டாட்ட்டத்திலும் வெற்றி கழிப்பிலும் ஈடுபட்டார்கள். குறித்த கொண்டாட்டம் கிண்ணியாவில் உள்ள அவரது வியாபார தளத்தில் இடம் பெற்றது.
இதே வேளை ,
இளைய தளபதி விஜயின் அரசியல் வெற்றியை கொண்டாடும் முகமாக நேற்று தொடக்கம் யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களிலும் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் இன்றையதினம் யாழ். காக்கைதீவு பகுதியில் பொருளாதார ரீதியாக நலிவுற்ற குடும்பங்களை சேர்ந்தோருக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும், வெற்றியை கொண்டாடும் முகமாக கொடிகள் பறக்க விடப்பட்டதுடன், பதாகைகளும் கட்டப்பட்டிருந்தன.
தேர்தலுக்கு முன்னரும் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து காக்கைதீவு பகுதியில் கொடிகள் கட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
விஜய் முதலமைச்சராக வெற்றிவாகை சூடியதையடுத்து இலங்கையில் கொண்டாட்டம் சட்ட மன்ற தேர்தலில் தமிழ் நாடு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் முதலமைச்சராக வெற்றிவாகை சூடியதையடுத்து கிண்ணியாவில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதனை நாச்சிக்குடா இளைஞனும் முன்னால் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற வேட்பாளருமான இம்ரான் தலைமையிலான இளைஞர் அணி இரவு (04) கொண்டாட்டத்தில் ஈடுபண்டார்கள்.தமிழ் நாடு முதலமைச்சர் விஜயை மனமார வாழ்த்துவதோடு வாழ்த்துக்கள் அடங்கிய பதாகைகளையும் ஏந்தி கொண்டாட்ட்டத்திலும் வெற்றி கழிப்பிலும் ஈடுபட்டார்கள். குறித்த கொண்டாட்டம் கிண்ணியாவில் உள்ள அவரது வியாபார தளத்தில் இடம் பெற்றது.இதே வேளை ,இளைய தளபதி விஜயின் அரசியல் வெற்றியை கொண்டாடும் முகமாக நேற்று தொடக்கம் யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களிலும் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.அந்தவகையில் இன்றையதினம் யாழ். காக்கைதீவு பகுதியில் பொருளாதார ரீதியாக நலிவுற்ற குடும்பங்களை சேர்ந்தோருக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.மேலும், வெற்றியை கொண்டாடும் முகமாக கொடிகள் பறக்க விடப்பட்டதுடன், பதாகைகளும் கட்டப்பட்டிருந்தன.தேர்தலுக்கு முன்னரும் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து காக்கைதீவு பகுதியில் கொடிகள் கட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.