யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் இடம்பெற்ற கர்நாடக இசைக் கச்சேரியில் தென்னிந்திய பிரபல கர்நாடக பாடகி நித்யஸ்ரீ கலந்து கொண்டு தன் குரலால் பார்வையாளர்களை மெய்மறக்க வைத்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திருவிழாவின் ஒரு பகுதியாக இந்திய தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் ஆண்டுதோறும் இசைக்கச்சேரி நடத்தப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் இந்த முறை தென்னிந்திய பிரபல கர்நாடக பாடகி டாக்டர் நித்யாஶ்ரீ மகாதேவன் அவர்களால் நடத்தப்பட்ட பக்தி சார்ந்த கர்நாடக இசைக் கச்சேரியை ஏற்பாடு செய்தது.
குறித்த இசைக்கச்சேரி இந்திய நிதியில் நிர்மாணிக்கப்பட்ட திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நேற்று (19) சிறப்பாக இடம்பெற்றது.
இதில் பாடகி டாக்டர் நித்யஶ்ரீ, முருகன் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பக்திப் பாடல்களை ஆன்மாவை உலுக்கும் வகையில் பாடி, பார்வையாளர்களை மெய்மறக்கச் செய்தார்.
அத்துடன் இந்தியாவிலிருந்து வந்த திறமைமிகு கலைஞர்களின் இசைக் குழுவும் அவருடன் இணைந்து கச்சேரியில் பங்கேற்றது.
இந்த கச்சேரி அரங்கம் நிறைந்த பார்வையாளர்களின் முன்னிலையில் நடைபெற்றது. நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திருவிழா காலத்தில் நிலவிய ஆன்மீகச் சூழலுடன் ஒத்திசைந்த இந்நிகழ்ச்சி, அனைவரின் உள்ளங்களிலும் ஆழமான பக்தி உணர்வை எழுப்பியது.
திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் கர்நாடக இசைக் கச்சேரி; பாடகி நித்யஸ்ரீயின் குரலால் மெய்மறந்த பார்வையாளர்கள் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் இடம்பெற்ற கர்நாடக இசைக் கச்சேரியில் தென்னிந்திய பிரபல கர்நாடக பாடகி நித்யஸ்ரீ கலந்து கொண்டு தன் குரலால் பார்வையாளர்களை மெய்மறக்க வைத்துள்ளார். நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திருவிழாவின் ஒரு பகுதியாக இந்திய தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் ஆண்டுதோறும் இசைக்கச்சேரி நடத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் இந்த முறை தென்னிந்திய பிரபல கர்நாடக பாடகி டாக்டர் நித்யாஶ்ரீ மகாதேவன் அவர்களால் நடத்தப்பட்ட பக்தி சார்ந்த கர்நாடக இசைக் கச்சேரியை ஏற்பாடு செய்தது. குறித்த இசைக்கச்சேரி இந்திய நிதியில் நிர்மாணிக்கப்பட்ட திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நேற்று (19) சிறப்பாக இடம்பெற்றது. இதில் பாடகி டாக்டர் நித்யஶ்ரீ, முருகன் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பக்திப் பாடல்களை ஆன்மாவை உலுக்கும் வகையில் பாடி, பார்வையாளர்களை மெய்மறக்கச் செய்தார். அத்துடன் இந்தியாவிலிருந்து வந்த திறமைமிகு கலைஞர்களின் இசைக் குழுவும் அவருடன் இணைந்து கச்சேரியில் பங்கேற்றது.இந்த கச்சேரி அரங்கம் நிறைந்த பார்வையாளர்களின் முன்னிலையில் நடைபெற்றது. நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திருவிழா காலத்தில் நிலவிய ஆன்மீகச் சூழலுடன் ஒத்திசைந்த இந்நிகழ்ச்சி, அனைவரின் உள்ளங்களிலும் ஆழமான பக்தி உணர்வை எழுப்பியது.