• May 26 2026

எரிபொருள் பவுஸருடன் மோதிய ஓட்டோ; தாயும், குழந்தையும் காயம்!

shanu / Sep 6th 2025, 5:49 pm
image

எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுஸரும், ஓட்டோவும் மோதி ஏற்பட்ட விபத்தில் குழந்தையும், தாயும் காயமடைந்ததாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த விபத்துச் சம்பவம் ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் செனன் தோட்டப் பகுதியில் நேற்று (05) மாலை 5  மணியளவில் இடம்பெற்றுள்ளது.


விபத்துத் தொடர்பில் தெரிய வருகையில், 

எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுஸர் வாகனத்தை,  முச்சக்கர வண்டி முந்திச் செல்ல முற்பட்டபோதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.


விபத்து நடந்த நேரத்தில், ஒரு சிறு குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் ஓட்டோவில் பயணித்துள்ளனர். 


இந்த நிலையில் விபத்தில் சிக்கி  ஒரு சிறு குழந்தையும், தாயும் காயமடைந்து வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..


விபத்தில் முச்சக்கர வண்டி கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும், பவுஸரின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும் ஹட்டன் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

எரிபொருள் பவுஸருடன் மோதிய ஓட்டோ; தாயும், குழந்தையும் காயம் எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுஸரும், ஓட்டோவும் மோதி ஏற்பட்ட விபத்தில் குழந்தையும், தாயும் காயமடைந்ததாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.இந்த விபத்துச் சம்பவம் ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் செனன் தோட்டப் பகுதியில் நேற்று (05) மாலை 5  மணியளவில் இடம்பெற்றுள்ளது.விபத்துத் தொடர்பில் தெரிய வருகையில், எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுஸர் வாகனத்தை,  முச்சக்கர வண்டி முந்திச் செல்ல முற்பட்டபோதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.விபத்து நடந்த நேரத்தில், ஒரு சிறு குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் ஓட்டோவில் பயணித்துள்ளனர். இந்த நிலையில் விபத்தில் சிக்கி  ஒரு சிறு குழந்தையும், தாயும் காயமடைந்து வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.விபத்தில் முச்சக்கர வண்டி கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும், பவுஸரின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும் ஹட்டன் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement