சுத்திகரிக்கப்பட்ட தாவர எண்ணெய்களுக்குப் பதிலாக அவகேடோ எண்ணெய் பயன்படுத்தலாமா என்ற கேள்வி தற்போது பலரிடையே எழுந்துள்ளது.
இதுகுறித்து ஃபோர்டிஸ் மருத்துவமனையின் ரோபோடிக்ஸ், பேரியாட்ரிக், லேப்ராஸ்கோபிக் மற்றும் பொது அறுவை சிகிச்சைத் துறையின் இயக்குநர் வைத்தியர் பங்கஜ் ஷர்மா, சமீபத்தில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அவகேடோ எண்ணெயின் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் குறித்து விளக்கியுள்ளார்.
வைத்தியர் ஷர்மாவின் கருத்துபடி,
அவகேடோ எண்ணெய் கொலஸ்ட்ரால் சமநிலையை மேம்படுத்துவதோடு, ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், குடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்தவும் உதவுகிறது.
குறிப்பாக சுத்திகரிக்கப்பட்ட தாவர எண்ணெய்களை தொடர்ந்து பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய சில நீண்டகால சுகாதாரப் பிரச்சினைகளை தவிர்க்க, அவகேடோ எண்ணெய் ஒரு சிறந்த மாற்றாக இருக்கலாம் என அவர் கூறுகிறார்.
சுத்திகரிக்கப்பட்ட தாவர எண்ணெய்களின் முக்கிய குறைபாடுகளில் ஒன்று அவற்றின் குறைந்த ஸ்மோக் பாயின்ட் ஆகும்.
இவ்வகை எண்ணெய்கள் அதிக வெப்பத்தில் சூடாக்கப்படும் போது விரைவாக ஆக்சிடைஸ் அடைந்து, செல்களுக்கு சேதம் விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை உருவாக்குகின்றன.
இதனால் கொழுப்பு கல்லீரல் மற்றும் இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதற்கு மாற்றாக, அவகேடோ எண்ணெய் சுமார் 270 டிகிரி செல்சியஸ் வரை உயர் ஸ்மோக் பாயின்ட்டை கொண்டுள்ளது.
இதனால் வதக்குதல், வறுத்தல் மற்றும் குறைந்த எண்ணெயில் பொரித்தல் போன்ற இந்திய சமையல் முறைகளுக்கு இது மிகவும் ஏற்றதாகும்.
மேலும், பெரும்பாலான தாவர எண்ணெய்களில் அதிகமாக காணப்படும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் உடலில் நாள்பட்ட அழற்சியை தூண்டக்கூடும் என்று டாக்டர் ஷர்மா சுட்டிக்காட்டுகிறார்.
ஆனால் அவகேடோ எண்ணெயில் மோனோசேச்சுரேட்டட் கொழுப்புகள் அதிகமாக இருப்பதால், இது இதய ஆரோக்கியத்திற்கு நல்லதாக செயல்படுகிறது.
இந்த வகை கொழுப்புகள் எல்டிஎல் எனப்படும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, எச்டிஎல் எனப்படும் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க உதவுகின்றன.
குறிப்பாக உடல் பருமன் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கும், அதற்குப் பிந்தைய பராமரிப்பில் உள்ள நோயாளிகளுக்கும், கொழுப்பை முழுமையாக தவிர்ப்பதைவிட இதயத்திற்கு ஆரோக்கியமான கொழுப்புகளை எடுத்துக்கொள்வதே அவசியம் என அவர் வலியுறுத்துகிறார்.
அவகேடோ எண்ணெய் அதிக கலோரி கொண்டதாக இருந்தாலும், அது அதிக திருப்தி உணர்வை அளிப்பதுடன், ரத்த சர்க்கரை அளவை நிலையாக வைத்திருக்க உதவுகிறது. சுத்திகரிக்கப்பட்ட தாவர எண்ணெய்களைப் போல இன்சுலின் அளவை திடீரென உயர்த்தாமல் செயல்படுவதால், உடல் பருமன், நீரிழிவு அல்லது மெட்டபாலிக் சிண்ட்ரோம் உள்ளவர்களுக்கு இது ஒரு பயனுள்ள தேர்வாக இருக்கலாம் என அவர் தெரிவிக்கிறார்.
குடல் ஆரோக்கியம் தொடர்பாகவும் அவகேடோ எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது. இது செரிமான மண்டலத்திற்கு இதமாக இருப்பதோடு, பித்தநீர் ஓட்டத்தை ஊக்குவித்து உடலில் உள்ள கொழுப்புகளை திறம்பட சிதைக்க உதவுகிறது. இதன் மூலம் கல்லீரலில் கொழுப்பு சேர்வதை குறைக்க முடியும். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவது, எடை குறைப்பை ஊக்குவிப்பது மற்றும் உடலிலுள்ள அழற்சியை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு நன்மைகளையும் அவகேடோ எண்ணெய் வழங்குகிறது என அவர் விளக்குகிறார்.
மொத்தத்தில், தினசரி சமையலில் பயன்படுத்தப்படும் எண்ணெய் தேர்வு நீண்டகால ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிப்பதால், சுத்திகரிக்கப்பட்ட தாவர எண்ணெய்களுக்கு மாற்றாக அவகேடோ எண்ணெயை அளவோடு பயன்படுத்துவது ஒரு நல்ல முடிவாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
தினசரி சமையலுக்கு அவகேடோ எண்ணெய் பயன்பாடுத்தலாமா சுத்திகரிக்கப்பட்ட தாவர எண்ணெய்களுக்குப் பதிலாக அவகேடோ எண்ணெய் பயன்படுத்தலாமா என்ற கேள்வி தற்போது பலரிடையே எழுந்துள்ளது.இதுகுறித்து ஃபோர்டிஸ் மருத்துவமனையின் ரோபோடிக்ஸ், பேரியாட்ரிக், லேப்ராஸ்கோபிக் மற்றும் பொது அறுவை சிகிச்சைத் துறையின் இயக்குநர் வைத்தியர் பங்கஜ் ஷர்மா, சமீபத்தில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அவகேடோ எண்ணெயின் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் குறித்து விளக்கியுள்ளார்.வைத்தியர் ஷர்மாவின் கருத்துபடி, அவகேடோ எண்ணெய் கொலஸ்ட்ரால் சமநிலையை மேம்படுத்துவதோடு, ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், குடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்தவும் உதவுகிறது. குறிப்பாக சுத்திகரிக்கப்பட்ட தாவர எண்ணெய்களை தொடர்ந்து பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய சில நீண்டகால சுகாதாரப் பிரச்சினைகளை தவிர்க்க, அவகேடோ எண்ணெய் ஒரு சிறந்த மாற்றாக இருக்கலாம் என அவர் கூறுகிறார்.சுத்திகரிக்கப்பட்ட தாவர எண்ணெய்களின் முக்கிய குறைபாடுகளில் ஒன்று அவற்றின் குறைந்த ஸ்மோக் பாயின்ட் ஆகும். இவ்வகை எண்ணெய்கள் அதிக வெப்பத்தில் சூடாக்கப்படும் போது விரைவாக ஆக்சிடைஸ் அடைந்து, செல்களுக்கு சேதம் விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை உருவாக்குகின்றன. இதனால் கொழுப்பு கல்லீரல் மற்றும் இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதற்கு மாற்றாக, அவகேடோ எண்ணெய் சுமார் 270 டிகிரி செல்சியஸ் வரை உயர் ஸ்மோக் பாயின்ட்டை கொண்டுள்ளது. இதனால் வதக்குதல், வறுத்தல் மற்றும் குறைந்த எண்ணெயில் பொரித்தல் போன்ற இந்திய சமையல் முறைகளுக்கு இது மிகவும் ஏற்றதாகும்.மேலும், பெரும்பாலான தாவர எண்ணெய்களில் அதிகமாக காணப்படும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் உடலில் நாள்பட்ட அழற்சியை தூண்டக்கூடும் என்று டாக்டர் ஷர்மா சுட்டிக்காட்டுகிறார். ஆனால் அவகேடோ எண்ணெயில் மோனோசேச்சுரேட்டட் கொழுப்புகள் அதிகமாக இருப்பதால், இது இதய ஆரோக்கியத்திற்கு நல்லதாக செயல்படுகிறது.இந்த வகை கொழுப்புகள் எல்டிஎல் எனப்படும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, எச்டிஎல் எனப்படும் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க உதவுகின்றன. குறிப்பாக உடல் பருமன் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கும், அதற்குப் பிந்தைய பராமரிப்பில் உள்ள நோயாளிகளுக்கும், கொழுப்பை முழுமையாக தவிர்ப்பதைவிட இதயத்திற்கு ஆரோக்கியமான கொழுப்புகளை எடுத்துக்கொள்வதே அவசியம் என அவர் வலியுறுத்துகிறார்.அவகேடோ எண்ணெய் அதிக கலோரி கொண்டதாக இருந்தாலும், அது அதிக திருப்தி உணர்வை அளிப்பதுடன், ரத்த சர்க்கரை அளவை நிலையாக வைத்திருக்க உதவுகிறது. சுத்திகரிக்கப்பட்ட தாவர எண்ணெய்களைப் போல இன்சுலின் அளவை திடீரென உயர்த்தாமல் செயல்படுவதால், உடல் பருமன், நீரிழிவு அல்லது மெட்டபாலிக் சிண்ட்ரோம் உள்ளவர்களுக்கு இது ஒரு பயனுள்ள தேர்வாக இருக்கலாம் என அவர் தெரிவிக்கிறார்.குடல் ஆரோக்கியம் தொடர்பாகவும் அவகேடோ எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது. இது செரிமான மண்டலத்திற்கு இதமாக இருப்பதோடு, பித்தநீர் ஓட்டத்தை ஊக்குவித்து உடலில் உள்ள கொழுப்புகளை திறம்பட சிதைக்க உதவுகிறது. இதன் மூலம் கல்லீரலில் கொழுப்பு சேர்வதை குறைக்க முடியும். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவது, எடை குறைப்பை ஊக்குவிப்பது மற்றும் உடலிலுள்ள அழற்சியை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு நன்மைகளையும் அவகேடோ எண்ணெய் வழங்குகிறது என அவர் விளக்குகிறார்.மொத்தத்தில், தினசரி சமையலில் பயன்படுத்தப்படும் எண்ணெய் தேர்வு நீண்டகால ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிப்பதால், சுத்திகரிக்கப்பட்ட தாவர எண்ணெய்களுக்கு மாற்றாக அவகேடோ எண்ணெயை அளவோடு பயன்படுத்துவது ஒரு நல்ல முடிவாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.