• Mar 10 2026

வட்டியில்லாத கடன் திட்டத்தில் தேசிய சேமிப்பு வங்கியை இணைத்துக் கொள்ள அமைச்சரவை தீர்மானம்!

shanu / Mar 10th 2026, 3:28 pm
image

கல்விப் பொதுத் தராதர (உயர்தர) பரீட்சையில் சித்தியடைந்த போதிலும் அரச பல்கலைக்கழகங்களில் வாய்ப்புக் கிடைக்காத மாணவர்களுக்கு அரசுசாரா உயர்கல்வி நிறுவனங்களில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பட்டதாரிப் பாடநெறிகளைக் கற்பதற்காக வட்டியில்லாத மாணவர்களுக்கான கடன் வழங்கும் திட்டம் அமுல்படுத்தப்படுகின்றது.


தற்போது குறித்த கடன்திட்டத்தை மக்கள் வங்கியும் இலங்கை வங்கியும் வழங்கி வருகின்றது. தற்போது இக்கடன்திட்டத்தின் 10 ஆவது கட்டத்தின் கீழ் 7,000 மாணவர்களுக்கான கடன் வசதிகளை வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. 


அதற்கமைய, மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கிக்கு மேலதிகமாக குறித்த கடன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு கடன் வழங்குகின்ற வங்கியாக தேசிய சேமிப்பு வங்கியையும் இணைத்துக் கொள்வதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வட்டியில்லாத கடன் திட்டத்தில் தேசிய சேமிப்பு வங்கியை இணைத்துக் கொள்ள அமைச்சரவை தீர்மானம் கல்விப் பொதுத் தராதர (உயர்தர) பரீட்சையில் சித்தியடைந்த போதிலும் அரச பல்கலைக்கழகங்களில் வாய்ப்புக் கிடைக்காத மாணவர்களுக்கு அரசுசாரா உயர்கல்வி நிறுவனங்களில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பட்டதாரிப் பாடநெறிகளைக் கற்பதற்காக வட்டியில்லாத மாணவர்களுக்கான கடன் வழங்கும் திட்டம் அமுல்படுத்தப்படுகின்றது.தற்போது குறித்த கடன்திட்டத்தை மக்கள் வங்கியும் இலங்கை வங்கியும் வழங்கி வருகின்றது. தற்போது இக்கடன்திட்டத்தின் 10 ஆவது கட்டத்தின் கீழ் 7,000 மாணவர்களுக்கான கடன் வசதிகளை வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கிக்கு மேலதிகமாக குறித்த கடன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு கடன் வழங்குகின்ற வங்கியாக தேசிய சேமிப்பு வங்கியையும் இணைத்துக் கொள்வதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement