• Oct 01 2026

பரபரப்பில் கோட்டை நீதிமன்றம்; பலத்த பாதுகாப்புடன் நுழைந்த ரணில், நாமல் ராஜபக்ஷ

Chithra / Sep 30th 2026, 1:54 pm
image



முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (30) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.


2023ஆம் ஆண்டு பிரித்தானியாவில் நடைபெற்ற தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டதன் மூலம் அரசுக்குச் சொந்தமான 166 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான நிதியை துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க ஆகியோருக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறுவதற்காக எதிர்வரும் நவம்பர் 11 ஆம் திகதி மீண்டும் அழைப்பதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (30) உத்தரவிட்டுள்ளது. 


கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் இவ்வழக்கு அழைக்கப்பட்ட போது, ரணில் விக்ரமசிங்க மற்றும் சமன் ஏகநாயக்க ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். 


விசாரணைகளின் நிலைமை மற்றும் இச்சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற வேண்டியதன் அவசியம் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது. 


இதேவேளை, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவும் இன்று மீண்டும் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.


சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்புக்கு மத்தியில், சிறைச்சாலை பேருந்தில் நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பரபரப்பில் கோட்டை நீதிமன்றம்; பலத்த பாதுகாப்புடன் நுழைந்த ரணில், நாமல் ராஜபக்ஷ முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (30) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.2023ஆம் ஆண்டு பிரித்தானியாவில் நடைபெற்ற தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டதன் மூலம் அரசுக்குச் சொந்தமான 166 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான நிதியை துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க ஆகியோருக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறுவதற்காக எதிர்வரும் நவம்பர் 11 ஆம் திகதி மீண்டும் அழைப்பதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (30) உத்தரவிட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் இவ்வழக்கு அழைக்கப்பட்ட போது, ரணில் விக்ரமசிங்க மற்றும் சமன் ஏகநாயக்க ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். விசாரணைகளின் நிலைமை மற்றும் இச்சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற வேண்டியதன் அவசியம் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது. இதேவேளை, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவும் இன்று மீண்டும் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்புக்கு மத்தியில், சிறைச்சாலை பேருந்தில் நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement